தேதி: March 4, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மஹாலெட்சுமி ப்ரகதீஸ்வரன் அவர்கள் வழங்கியுள்ள அரேபியன் ஸ்டைல் மீன் வறுவல் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மஹாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.
மீன் - 5 பெரிய துண்டுகள்
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கோதுமை மாவு - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கழுவின மீனை போட்டு அதில் உப்பு, மஞ்சள் தூள் தூவி நன்றாக பிரட்டி வைக்கவும்.

பின்னர் மீனின் மீது கோதுமை மாவைத் தூவவும். இப்படி ஒவ்வொரு மீனிலும் தூவி, அதை ஒரு தட்டில் வைத்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் மீனை ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்து எடுக்கவும்.

எளிமையாக செய்யக்கூடிய அரேபியன் மீன் வறுவல் தயார்.

அரேபியர்கள் பொதுவாக காரம் அதிகம் சாப்பிட மாட்டார்கள், அதனால் அவர்களுடைய சாப்பாடு காரத்தன்மை குறைவாக இருக்கும்.
Comments
அரேபியன் மீன் வறுவல்
என்ன வகையான மீன்களில் இந்த் வறுவலை செய்யலாம்?
ஷாலி அருண்
shali-09
எல்லா மீனிலும் செய்யலாம்..
மிகவும் ஈசியான சுவையான
மிகவும் ஈசியான சுவையான குறிப்பு.... நன்றி
ஷாலி அருண்
மீன் வறுவல்
ரொம்ப ஈஸியா இருக்கு மிளகாய் தூள் சேர்க்க தேவையில்லை யா இந்த வறுவலுக்கு
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela
தர்ஷா
இந்த செட் குயின் ரெசிபீஸ் படங்கள் அத்தனையும் பளிச்சுன்னு சாப்பிட கூப்பிடுது. சூப்பருங்க :) வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா