தொப்பி க்ளிப்

தேதி: March 4, 2015

5
Average: 5 (2 votes)

 

விரும்பிய நிறத்தில் துணி
தையல் ஊசி, நூல்
பாட்டில் மூடி - 1
வளையல் - 1
க்ளிப்

 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
துணியின் மேல் வளையலை வைத்து பார்த்து அதை விட அளவில் பெரியதாக இருக்கும்படி ஒரு பெரிய வட்டமாக வரைந்துக் கொண்டு அதை வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதை போல பாட்டில் மூடியின் அளவை விட பெரிய அளவில் மற்றொரு துணி வெட்டி எடுக்கவும். துணிகள் இரண்டில் ஒன்று மற்றொன்றை விட பெரியதாக இருக்க வேண்டும்.
ஊசியில் நூலைக் கோர்த்துக் கொண்டு சிறிய அளவில் இருக்கும் துணியின் நடுவில் மூடியை வைத்து அதன் வெளி ஓரங்களை தொடர் தையல் போட்டு தைக்கவும்.
மூடியை வைத்து தொடர் தையல் போட்டதும் அந்த நூலை பிடித்து சுருக்கி பொட்டலம் போல் செய்யவும். பின்னர் வளையலை பெரிய துணியில் வைத்து ஓரங்களில் தொடர் தையல் போடவும்.
வளையலை வைத்து தைத்த துணியையும் சுருக்கவும். அதன் பின்னர் வளையலின் மேல் மூடியை வைத்து இரண்டையும் இணைத்து சுற்றி தைக்கவும். (உள்ளிருக்கும் தையல் தெரியாதபடி மூடி வைத்து தைக்கவும்)
தொப்பியின் மேல் தையல் தெரியாமல் இருக்க லேஸ் அல்லது ரிப்பனை சுற்றிலும் கட்டி அலங்கரிக்கவும். தொப்பியின் அடியில் சிறிய க்ளிப்பை ஒட்டி விடவும் அல்லது பேண்ட்டை தைத்து விடவும். குழந்தைகளின் ட்ரெஸ்ஸிற்கு ஏற்ப நாமே இதுப்போல் அழகிய க்ளிப் தயாரிக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வடிவா இருக்கு சுரேஜினி. கட்டாயம் செய்து பார்ப்பேன்.

இனி நிறையக் குறிப்பு வரும் என்று நினைக்கிறன். :-) அனுப்புங்கோ. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

வாவ்... வெல்கம் பேக் ;) நீங்க எப்பவும் பார்வையிட்டிருப்பீங்க, இருந்தாலும் இப்ப தானே குறிப்புலாம் கொடுக்கறீங்க இடைவெளிக்கு பின்... அதான் வெல்கம் பேக் வரவேற்பு. நலமா? தொப்பி சூப்பரா இருக்குங்க... நானும் செய்து பார்க்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இம்ஸ் வனி டாப் ரெண்டு சகலகலா வல்லிகளும் ஊக்கம் குடுக்கிறது சந்தோசமா இருக்கு .இனி நிறையக் குறிப்பு வரும் என்று நினைக்கிறன். :-) // பிளான் இருக்கவில்லை ஆனா நீங்கள் இப்பிடி கேட்டா பிறகு பிளான் வந்துட்டு . ம்ம் செய்து பாருங்கோ நீங்கள் செய்தா இன்னும் நீட் ஆ வரும் . அறுசுவை டீம் அழகா ஒழுங்கமைச்சு வெளியிட்டிருக்கிறதை பாக்க இன்னும் நிறைய effort எடுத்து குறிப்புகள் அனுப்ப ஆசையா இருக்கு. மிக்க நன்றிகள் எல்லாருக்கும்.

செய்தாச்சுது சுரேஜினி. வடிவா வந்திருக்கு. நான் ப்ரோச் பின் ஒட்டினனான். ஃபோட்டோ... ஃபான்ஸ் க்ரூப்ல போட்டிருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்