தேதி: March 5, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பேரீச்சம் பழம் - 25 கிராம்
நெய் - 100 கிராம்
கோதுமை மாவு - 3 கப்
ரவை - 3/4 கப்
வெள்ளரி விதை - 25 கிராம்
உலர்ந்த திராட்சை - 25 கிராம்
கொப்பரைத் துருவல் - 50 கிராம்
வெல்லம் (அ) சர்க்கரை - 250 கிராம்
பாதாம் பருப்பு - 25 கிராம்
பேரீச்சம் பழத்தை விதை நீக்கிச் சிறுத் துண்டுகளாய்ப் நறுக்கவும். வாணலியில் நெய் விட்டுக் காய்ந்தவுடன் நறுக்கிய பேரீச்சம் பழத்தை போட்டுப் பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.

மீதியுள்ள நெய்யில் கோதுமை மாவு மற்றும் ரவையைக் கொட்டிப் பொன்னிறமாகும் வரை கிளறவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.

வறுத்த மாவுடன் வெல்ல பாகை சேர்த்து நன்கு கிளறவும். வெல்ல பாகுக்கு பதில் சர்க்கரையும் சேர்க்கலம்.

அதில் வறுத்த பேரீச்சம் பழம், வெள்ளரி விதை, உலர்ந்த திராட்சை, தோலுரித்துத் துண்டுகளாக்கிய பாதாம் பருப்பு, கொப்பரை சேர்த்து நன்கு கிளறிச் சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கவும்.

சுவையான சத்தான கஸார் தயார். ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
