தக்காளி மசால்

தேதி: March 5, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. கெளரி சுரேஷ் அவர்களின் தக்காளி மசால் என்கின்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கெளரி அவர்களுக்கு நன்றிகள்.

 

தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம்
மல்லித் தழை, கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - சிறிதளவு
வரமிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
மிளகு பொடி - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், மல்லித் தழை, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கின தக்காளி சேர்த்து வதக்கவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவலுடன் வரமிளகாய் பொடி, மிளகு பொடி இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.
அரைத்த‌ விழுதை வெங்காய‌ தக்காளி கலவையில் சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கலவை நன்றாக கொதித்த பின்பு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். இதனை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சப்பாத்தியுடனும் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் கிச்சன் குயின் :) தக்காளி மசால் அருமை

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அப்பா எம்புட்டு வேகம். மனமார்ந்த‌ நன்றிகள் அட்மின் டீம்.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றிகள் பல‌ ஸ்வர்ணா. சுவையும் நல்லா இருந்துச்சி. செய்து பாருங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....