தேதி: March 7, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கத்தரிக்காய் - 2
அவரைக்காய் - 3
முருங்கைக்காய் - ஒன்று
புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
வறுத்து அரைக்க:
சிவப்பு மிளகாய் - 4 - 5
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தேங்காய்ப் பூ - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
வெள்ளைப் பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 6 - 7
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்
புளியைக் கரைத்து வைக்கவும். காய்களை நீளவாக்கில் நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்.

மிளகு, சீரகம், சிவப்பு மிளகாய், இவற்றை லேசாக வறுத்து மிக்ஸியில் அரைக்கவும்.

அதனுடன் தேங்காய்ப் பூ, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

வெந்த காய்களுடன், கரைத்த புளித் தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி வர விடவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ளதையும் கரைத்து ஊற்றி மீண்டும் ஒரு கொதி வர விடவும்.

இறக்கி வைத்த பிறகு, நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவையான வெள்ளைக் கறி தயார். திருமதி. சீதாலெட்சுமி அவர்களின் குறிப்பினை பார்த்து செய்தது.

Comments
வனி
சூப்பரான சுவையான வெள்ளைகறி அழகா செய்து காட்டியிருக்கீங்க வாழ்த்துக்கள் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
vani
Super a iruku vani
Be simple be sample
நன்றி
குறிப்பை தந்த சீதாலஷ்மிக்கும், வெளியிட்ட அட்மின் குழுவினருக்கும், பதிவிட்ட சுவா ரேவ்ஸ்க்கும் மனமார்ந்த நன்றிகள் :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா