தேதி: March 9, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மீன் - 2
துருவிய சீஸ் - ஒரு கப்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம் பழச்சாறு - 2 மேசைக்கரண்டி
ரொட்டித் தூள் - தேவையான அளவு
மீனை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கழுவி எடுத்துக் கொள்ளவும்.

முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

கழுவிய மீன் துண்டுகளின் மீது உப்பை தடவி பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.

பிறகு மீனில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு மிளகாய்த் தூள், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

அடித்து வைத்த முட்டையில் மீன் துண்டுகளை தோய்த்து ரொட்டித்தூள், துருவிய சீஸில் புரட்டி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் தோசைக்கல்லை போட்டு எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட்டிய மீன் துண்டுகளை போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.

இதே போல் அனைத்து மீன் துண்டுகளையும் பொரித்து எடுக்கவும். சுவையான சீஸுடன் வறுத்த மீன் தயார்.
