முட்டை மசால்

தேதி: March 10, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

வேக வைத்த முட்டை - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு - 6 பல்
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
கடலை பருப்பு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு


 

வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். முட்டையை இரண்டாக வெட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு போட்டு நன்கு வதக்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைந்ததும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.
அதில் இரண்டாக வெட்டிய முட்டைகளை போட்டு கிளறி மசாலா நன்கு முட்டையில் சேர்ந்ததும் நறுக்கிய கொத்தமல்லித் தழையை தூவி இறக்கவும்.
சுவையான முட்டை மசாலா தயார். இந்த மசாலா பருப்பு சாதம் மற்றும் தயிர் சாதத்திற்கு நன்றாக இருக்கும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுலபமான முட்டை மசால். நல்லாயிருக்கு வித்யா :))