எனது குறிப்புகள்

து.பருப்பு,ப.பருப்பு,உ.பருப்பு வைக்கபடும் டப்பாக்களில் 3 அல்லது 4 காய்ந்த மிளகாயை போட்டு வைத்தால் வண்டு வராது.

lakshmi sri sundar

இட்லி மாவுடன்,ஒரு கைப்பிடி ஜவ்வரிசி சேர்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும்

lakshmi sri sundar

மிருதுவான சப்பாத்திக்கு கோதுமை 3 பங்கு என்றால் 1 பங்கு மைதா என்ற விகிதத்தில் சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.நான் சாதாரண தண்ணீர் ,உப்பு சேர்த்து பிசைந்து வைத்து அதன் மேல் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு சுற்று சுற்றி எண்ணெய் எல்லா இடங்களிலும் படும்படி செய்து 1/2 மணி நேரம் வைத்து மூடி விடுவேன்.பிறகு சப்பாத்தி செய்தால் ஸாஃப்டாக இருக்கும்.

கறிவேப்பிலையை கீத்தி ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் தேவைபடும்போது எடுத்து உடனே வைத்து விட வேண்டும்.சிறிது நேரம் கழித்து வைத்தால் அவ்வளவு தான்.அடியில் உள்ள இலைகள் நன்றாக இருக்கும் மேலே உள்ளவை கெட்டு போகும்.முடிந்தளவு ஃப்ரிட்ஜில் வைத்தே எடுப்பது நல்லது.

மேலும் சில பதிவுகள்