செட்டிநாட்டு தக்காளி குருமா

தேதி: March 10, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட செல்வி. ரம்யா அவர்களின் செட்டிநாட்டு தக்காளி குருமா என்கின்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ரம்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

தக்காளி - 10
பச்சைமிளகாய் - 3
பெரிய வெங்காயம் - ஒன்று
முந்திரிப்பருப்பு - 8
பூண்டு - 3 பல்
சோம்பு - அரை தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
கசகசா - ஒரு தேக்கரண்டி
பட்டை - இரண்டு சிறிய துண்டுகள்
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - 3 தேக்கரண்டி


 

தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
மிக்ஸியில் துருவிய தேங்காய், கசகசா, முந்திரி, பட்டை, சோம்பு, பச்சைமிளகாய், பூண்டு, சிறிது நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து மீதமுள்ள நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கலவை நன்றாக கொதித்ததும் உப்பு சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். சுவையான செட்டிநாடு தக்காளி குருமா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்!! முதல் முறை கிச்சன் குயின் :) வாழ்த்துக்களும் மனமார்ந்த பாராட்டுக்களும் வித்யா. தொடர்ந்து பங்கெடுக்கணும்னு அன்போடு கேட்டுக்கறேன். படங்கள் எல்லாம் நல்லா வந்திருக்கு, வித்தியாசமான நல்ல குறிப்புகள். அதுவும் இந்த குறிப்பு ரொம்ப பிடிச்சிருக்கு. ட்ரை பண்றேன் வித்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா