பூசணிக்காய் மாங்காய் பச்சடி

தேதி: March 10, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. கவிசிவா அவர்களின் பூசணிக்காய் மாங்காய் பச்சடி என்கின்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கவிசிவா அவர்களுக்கு நன்றிகள்.

 

பூசணிக்காய் - ஒரு கப்
மாங்காய் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3 (வட்டமாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு:
அரைக்க :
தேங்காய் துருவல் - அரை கப்
மிளகாய் வற்றல் - ஒன்று
சீரகம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

பூசணிக்காய் மற்றும் மாங்காயை பொடியாக நறுக்கி வைக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.
குக்கரில் பூசணிக்காய், மாங்காய், பச்சைமிளகாய்யுடன் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
காய்கள் வெந்ததும் திறந்து கரண்டியால் அல்லது மத்தால் மசித்து விடவும்.
மசித்த காய்க் கலவையில் அரைத்து வைத்திருக்கும் விழுதினை ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
பச்சை வாசம் அடங்கியதும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பச்சடியில் சேர்க்கவும். சுவையான பூசணிக்காய் மாங்காய் பச்சடி தயார்.

தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெய் உபயோகித்தால் மிகவும் அருமையாக‌ இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பூசணி மாங்காய் பச்சடி கலக்கல்... சுவை அபாரமா இருக்கும்னு படங்களை பார்க்கும் போதே தெரியுது.. வாழ்த்துகள் :)

"எல்லாம் நன்மைக்கே"