பால் கொழுக்கட்டை (சிலோன் ஸ்வீட்)

தேதி: March 11, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. அமியா க்றிஸ் அவர்கள் வழங்கியுள்ள சிலோன் ஸ்வீட்டான பால் கொழுக்கட்டை குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய அமியா அவர்களுக்கு நன்றிகள்.

 

அரிசிமாவு - 50 கிராம்
சீனி - 75 கிராம்
தோல் நீக்கி உடைத்தப்பயறு - 75 கிராம்
பொடி செய்த ஏலம், கிராம்பு - 2 தேக்கரண்டி
வனிலா - ஒரு தேக்கரண்டி
குங்குமப்பூ - சிறிது


 

அரிசி மாவுடன் அரை கப் வெந்நீர் ஊற்றி நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவை மிகச்சிறிய உருண்டைகளாக உருட்டி நீராவியில் வேக வைத்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பயறைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
பயறு வெந்ததும் அதில் பால், சீனி, ஏலம் கிராம்பு பொடி, வனிலா ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி விடவும்.
பால் நன்றாகக் காய்ந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, வேக வைத்த உருண்டைகளை சேர்த்து கிளறி ஆற விட்டுப் பரிமாறவும்.
சுவையான பால் கொழுக்கட்டை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

It looks yummy.. howmuch quantity milk needed..