நூடுல்ஸ் அடை

தேதி: March 12, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஜெகபர் நாச்சியார் அவர்கள் வழங்கியுள்ள நூடுல்ஸ் அடை குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜெகபர் நாச்சியார் அவர்களுக்கு நன்றிகள்.

 

நூடுல்ஸ் - 200 கிராம்
முட்டை - 8
சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
சிக்கன் - ஒரு பீஸ்
எலுமிச்சை பழம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
முட்டைக்கோஸ் - 100 கிராம்
காரட் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்


 

முட்டைக்கோஸ், காரட், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தண்ணீரை கொதிக்க வைத்து நூடுல்ஸை ஒரு நிமிடம் போட்டு எடுத்துக் கொள்ளவும்.
வேக வைத்த நூடுல்ஸுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு பிசைந்துக் கொள்ளவும்.
அதனுடன் முட்டை, சில்லி சாஸ், மிளகுத் தூள், சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய சிக்கன் ஆகியவற்றைச் ஒன்றாகச் சேர்த்து கலக்கவும். அதில் தேவையான உப்பு மற்றும் எலுமிச்சம்பழம் சாற்றையும் பிழிந்து கலந்து கொள்ளவும்.
அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அடை கல்லில் ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும். சுவையான நூடுல்ஸ் அடை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

wow! சூப்பர் இப்பொவே சாப்டனும் போல‌ இருக்கு ரொம்ப நல்ல‌ குறிப்பு.. நா செஞ்சு பாக்ரேன்

நன்றி ஷபானா. செய்து பாருங்க. சிறியவர்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.
ஷபானா என்று இங்கு எனக்கு ஒரு இஸ்லாமிய தோழி உண்டு :))