தக்காளி மசாலா

தேதி: March 12, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

தக்காளி - 12
பெரிய வெங்காயம் - 4
நெய் - 100 கிராம்
கொத்தமல்லி - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - அரைத் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிய துண்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தனியாத் தூள் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி


 

வெங்காயம், தக்காளி கொத்தமல்லி மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் சீரகம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி பதினைந்து நிமிடங்கள் வேக விடவும்.
பின்னர் மீதி உள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
கலவை கொதித்து கெட்டியாக வரும் போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
சுவையான தக்காளி மசாலா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்