முட்டை பிரியாணி

தேதி: March 13, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (6 votes)

 

பிரியாணி அரிசி - 2 ஆழாக்கு
முட்டை - 4
வெங்காயம் - 5
தக்காளி - 3
இஞ்சி பூண்டு - 50 கிராம்
தயிர் - அரை கப்
தேங்காய் துருவல் - அரை கப்
பச்சை மிளகாய் - 5
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - பாதி
புதினா, கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
தாளிக்க :
பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2


 

வெங்காயம், தக்காளியை நீளவாட்டில் நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாகஅரைக்கவும். தயிருடன் தேங்காய் துருவலைக் கலந்து வைக்கவும். அரிசியை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். 2 முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். மீதிமிருக்கும் முட்டையுடன் ஒரு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஆம்லெட் போட்டு சதுர துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, புதினா மற்றூம் கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி, தயிர் கலவையை சேர்க்கவும்.
பிறகு கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வேக வைத்த முட்டையை கீறிச் சேர்த்து, ஆம்லெட் துண்டுகளையும் சேர்த்து பக்குவமாகக் கிளறவும். மற்றொரு அடுப்பில் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் அளவில் மீதி தாளிக்கும் பொருள்கள், சிறிது புதினா சேர்த்து கொதிக்க வைத்து தயார் நிலையில் வைக்கவும்.
கொதிக்கும் நீரை வதகிகிய மசாலாவில் ஊற்றவும். கொதித்ததும் அரிசியைச் சேர்த்து ஒரு முறை கிளறி, விரும்பினால் கலர் பவுடர் சேர்த்து, எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும்.
குக்கரை மூடி 15 நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும்.
சுவையான முட்டை பிரியாணி தயார்.

விருப்பமெனில் தேங்காய் துருவலுக்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்து கொள்ளலாம். நெய், முந்திரி அவரவர் விருப்பம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Namma revs recipea nu photovaiyum peraiyum adikkadi chk pannen :o sama super photos revs. Asathal.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முட்டை பிரியாணி கலக்கல்... படங்கள் பிரமாதம் போங்கே

"எல்லாம் நன்மைக்கே"

சூப்பரா இருக்கு. அருமையா செய்து இருக்கீங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

சூப்ப்ரா இருக்கு. படம் கலக்கல் செய்து பார்க்க சொல்லுது.செய்துபார்கிறேன்.

எனது குறிப்பை வெளியிட்ட‌ அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினர்க்கு நன்றி.

Be simple be sample

:D thanku vani. Photos Ku ugakitaye parattuna revathi happy annachi. Thanku

Be simple be sample

Thanku packia.

Be simple be sample

Thanku bala

Be simple be sample

Seithu parthutu kandippa dollanum. Thanku tharsa.

Be simple be sample

அட நம்ம ரேவ்ஸ் ரெசிப்பியா சூப்பருங்கோ படங்கள் இம்புட்டு அழகா இருக்கு குறிப்பும் படமும் செம அழகு வாழ்த்துக்கள் ரேவ்ஸ் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Thanku SWA. ;)

Be simple be sample

செய்து பார்த்தேன்,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

தான்க்யூ சோ மட் முசி. செய்து பார்த்து மறக்காம சொன்னதுக்கு. நன்றி

Be simple be sample

முட்டை பிரியாணி
செய்து பார்த்தேன்,சூப்பர்.

ரொம்ப ரொம்ப தான்க்ஸ். செய்து பார்த்து மறக்காம பதிவிட்டதற்கு மிக்க நன்றி.

Be simple be sample

இன்று முட்டை பிரியாணி செய்தேன். சூப்பர்ப். செம டேஸ்ட் பா.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

hi,
today i tried this recipe. it came out really very well... easy to cook.. thank u so much for sharing this recipe....

nila thiru

When there is a will,there is a way.... :)

கலக்கல் ரெசிபி ரேவ்ஸ். கடைசிப் படம் - பார்க்கவே சாப்பிட ஆசையா இருக்கு.

‍- இமா க்றிஸ்