தேதி: March 14, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
புட்டு செய்ய :
கேழ்வரகு சேமியா - ஒரு பாக்கெட்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - கால் மூடி
ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
வெல்லம் - தேவையான அளவு
உப்புமா செய்ய:
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கடுகு, உளுந்து - தலா அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கேழ்வரகு சேமியாவில் கால் டம்ளர் தண்ணீரில் உப்பு கலந்து அதை தெளித்து 5 நிமிடம் ஊற விடவும்.

ஊறிய சேமியாவை இட்லி தட்டில் வேக வைக்கவும்.

வெந்ததும் பாதி அளவு சேமியாவை எடுத்து தேங்காய் துருவல், வெல்லம், ஏலத்தூள் சேர்த்து கிளறவும். கேழ்வரகு புட்டு தயார்.

உப்புமா செய்ய வாணலில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும்.

அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் மீதிமிருக்கும் சேமியாவை சேர்த்து கிளறவும். சேமியா வேக வைக்கும் போதே உப்பு சேர்த்திருப்பதால் உப்பு சேர்க்க தேவையில்லை. கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

சத்தான கேழ்வரகு சேமியா புட்டு மற்றும் உப்புமா தயார்.

Comments
bala
Enaku intha puttu romba pidikum super a iruku.
Be simple be sample
பாலா
இரண்டுமே அருமையா இருக்குங்க சத்தான குறிப்புகள் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
நன்றி அட்மின்
குறிப்பை அழகாக வெளியிட்ட அட்மினுக்கு நன்றிகள் பல.
எல்லாம் சில காலம்.....
ரேவ்'ஸ்
நன்றி ரேவ்'ஸ். இது பெரியவங்களுக்காக அடிக்கடி செய்வோம்.
எல்லாம் சில காலம்.....
ஸ்வர்ணா
நன்றி ஸ்வர்ணா
எல்லாம் சில காலம்.....