தேதி: March 14, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பால் - ஒரு லிட்டர்
சீனி - தேவையான அள்வு
பிஸ்தா - 50கிராம்
கார்ன் ஃப்ளார் - 2 கரண்டி
பச்சை கலர் - சிறிது
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு பாலுடன் கார்ன் ஃப்ளார், தேவையான கலர் சேர்த்து கலந்து வைக்கவும்.

பாலை நன்கு காய்ச்சவும். தீயின் அளவை குறைவாக வைத்துக் கொள்ளவும். பால் காய்ந்ததும் சீனியை சேர்க்கவும்.

பிஸ்தாவை பொடி செய்து வைத்து கொள்ளவும்.

பாலில் பொடித்த பிஸ்தாவை சேர்க்கவும்.

பின்னர் கலர் கலந்து வைத்திருக்கும் பாலை சேர்த்து கலக்கவும்.

சிறிது நேரம் கழித்து இறக்கி மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற விடவும். அதன் பிறகு ஃப்ரீசரில் செட் ஆகும் வரை வைத்திருக்கவும்

சுவையான பிஸ்தா ஐஸ்கிரீம் தயார். பெளலில் வைத்து பிஸ்தாவை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

Comments
tharsa
Summer Ku etha kulukulu recipe. Enaku oru cup
Be simple be sample
தர்ஷா
இவ்ளோ ஈசியா ஐஸ்கிரீமா சூப்பர் வாழ்த்துக்கள் தர்ஷா :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
admin
மீண்டும் என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்க்கு என் நன்றிகள்.
Revathi.s
உங்களுக்கு இல்லாததா.எடுத்துக்கொள்ளுங்க.
swarna
ரொம்ப நன்றி சுவா.
தர்ஷா
சூப்பரா இருக்கு. ரொம்ப சிம்பிளாவும் இருக்கு. என் வீட்டு வாண்டுக்கு இதன் பிறகு வீட்டிலேயே இந்த ஐஸ்கிரீம் செய்து கொடுக்கறேன். நன்றி தர்ஷா
எல்லாம் சில காலம்.....
பிஸ்தா ஐஸ்கீரிம்
பிஸ்தா ஐஸ்கீரிம் சூப்பர் தர்ஷா.. ரொம்ப ஈசியான ரெசிபி. நிச்சயம் ட்ரை பண்றேன்.. சூப்பர்..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
தர்ஷு
பிஸ்தா ஐஸ்கிரீம் சூப்பர், ப்ரசன்டேஷன் செம்மையா இருக்கு., சம்மர்ல குட்டீஸ் வீட்டுக்கு வருவாங்க அப்ப கண்டிப்பா உங்களோடா ஐஸ்கிரீம் , ரேவ்ஸ்ன் குல்பி எல்லாம் ட்ரை பண்றேன்.
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
அன்புடன்
ஹேமா
balanayaki,revathy, hema
ரொம்ப நன்றி.செய்து பார்த்து சொல்லுங்க.