தேதி: March 16, 2015
ரிப்பன்
எலாஸ்டிக்
கிச்சன் க்ளாத்
வெள்ளை மணி
பெவிக்கால்
ரிப்பனை 50 செ.மீ அளவிற்கு நறுக்கி எடுத்துக் கொள்ளவும். எலாஸ்டிக்கை 6 அல்லது 7 செ.மீ அளவிற்கு நறுக்கி எடுத்துக் கொள்ளவும். கிச்சன் க்ளாத்தை அரை செ.மீ அகலம் 30 செ.மீ நீளத்திற்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.( இந்த கிச்சன் க்ளாத் பேப்பர் போலவே இருக்கும், கிச்சனில் சுத்தம் செய்ய பயன்படுத்துவார்கள்)

ரிப்பனின் ஆரம்பத்தில் சிறிதாக மடக்கிக் கொண்டு மெஷினில் வைத்து அதனை தொடர்ந்து சிறு சிறு மடிப்பாக மடக்கி வைத்து நடுவில் தைத்துக் கொண்டே வரவும். கடைசியில் முடிக்கும் போது மடக்கி வைத்து தைக்கவும்.

தைத்த ரிப்பனை திருப்பிக் கொண்டு நடுவில் எலாஸ்டிக்கை வைத்து ஒட்டவும்.

அதன் மேல் நறுக்கி வைத்திருக்கும் கிச்சன் க்ளாத்தை வைத்து ஒட்டி இரண்டு ஓரங்களிலும் மீதமிருக்கும் பேப்பரை நறுக்கி விடவும்.

ரிப்பனின் முன்பக்கம் திருப்பி கொண்டு நடுவில் வெள்ளை நிற மணியை வைத்து ஒட்டவும்.

அழகிய ரிப்பன் ஹேர்பேண்ட் தயார். குழந்தைகளின் ட்ரெஸ் நிறத்திற்கு ஏற்ப செய்துக் கொள்ளலாம். ரிப்பனின் நடுவில் மணி வைக்காமல் சிறிய ரோஸ் வைத்தும் அலங்கரிக்கலாம்.

Comments
செண்பகா
சூப்பர் ஹெட்பாண்ட். அழகா இருக்கு. நவீனாவுக்கு பண்ணியதா?
இப்பவும்... 'க்ராஃப்ட் பேப்பர்' என்கிறதுதான் புரியல. நிச்சயம் அது 'பேப்பராக' இருக்க முடியாது. வேற என்னவோ பேர் இருக்கும் என்று தோணுது. கொஞ்சம் என்னவென்று சொல்லுங்க.
- இமா க்றிஸ்
செண்பகா
இவ்வளவு சிம்பிளா செய்யலாமா செண்பகா ரொம்ப அழகா இருக்கு.
ஆனா எனக்கு பொண்ணு இல்ல செய்து போட்டு விட
செண்பகா & டீம்
:-) பதில் சொல்லியிருக்கீங்களா என்று பார்க்க வந்தேன். ;)) இப்ப என்னால எடிட் பண்ண முடியாம இருக்கே! மாட்டிட்டேன். :-)
கட்டாயம் ட்ரை பண்ணுவேன்.
- இமா க்றிஸ்