பலாக்கொட்டை பூண்டு மசாலா

தேதி: March 17, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பலாக்கொட்டை - 10 - 15
வெள்ளை பூண்டு - ஒன்று
சின்ன வெங்காயம் - 10
சாம்பார் பொடி - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
தக்காளி - ஒன்று
தாளிக்க:
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு
மிளகாய் வற்றல் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது


 

சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
பலாக்கொட்டையை தோல் நீக்கி நறுக்கி உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். அதில் மிளகாய் வற்றல் சிவந்ததும் கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி, தேவையான உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.
பின்னர் சாம்பார் பொடி சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பச்சை வாசம் போக மசாலா திரண்டு வரும் வரை பிரட்டவும்.
இதில் வேக வைத்த பலாக்கொட்டையை நீர் இல்லாமல் சேர்த்து 5 நிமிடம் பிரட்டி, பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் பிரட்டி எடுக்கவும்.
சுவையான பலாக்கொட்டை பூண்டு மசாலா தயார். சாம்பார், ரசம் அல்லது தயிர் சாதத்துடன் பக்க உணவாக பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டீமு... நீங்க என்ன ஜெட்டா வேலை பார்க்கறீங்க??!! :o ஆனாலும் இதெல்லாம் ஓவர் ஸ்பீடு தாயி. நன்றி நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரா இருக்கு. இதோட‌ பலா பழம் சீசன் தான். செஞ்சிட‌ வேண்டியது தான். அருமை போங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

பலா சீசன் வந்தாச்சா ?! இனிமே பலாப் பழமும், பலாக் கொட்டை ரெசிப்பியுமா வருமே:) நான் படத்தை பார்த்து ரசித்து விட்டு பொரேன். பலாக்கொட்டை கிடைக்கும் போது உங்க பலாக்கொட்டை அவியல் செய்துப் பார்க்கணும்ன்னு நினைச்சிட்டிருக்கேன். :))

பலாக் கொட்டை ரெசிபி சூப்பர் ம்மா.. பலாக்கொட்டை பூண்டு மசாலா வாசனை இங்கே வரைக்கு வருது வனி. இப்போ தான் எங்க வீட்டு மரத்தில் பழம் வந்திருக்கு. அதை பறித்து பழைத்தை சாப்பிட்டு அப்பறும் பலாக் கொட்டை எடுத்து இந்த மசாலா செய்துட்டு போட்டோ போடுறேன்.. வெய்ட்டிங்... அவ்வ்வ்வ் சூப்பர் சகல கலா வள்ளி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

பலாக்கொட்டை பூண்டு குழம்பு சூப்பர், அருமையா செஞ்சிருக்கீங்க‌. அதுவும் அந்த‌ ப்ரசன்டேஷன் போட்டோ வெரி டெம்ட்டிங்...:)

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

Super vani. Session vanthachu seithuta povhu.

Be simple be sample

ஆஹா பலாக்கொட்டை மசாலா சூப்பரோ சூப்பர் எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நான் முதல் முறையாக பதிவு செய்கிறேன். தவறு இருதால் மன்னிக்கவும். ஏனக்கு இரண்டறை வயது பெண் குழந்தை உள்ளது. ஏனக்கு இதுவறை மாதவிலக்கு சரியாக இறுந்தது.ஆனால் கடந்த இரண்டு மாதமாக ஒரு வாரம் தள்ளி இருதாலும் 7 நாள் முடியவேன்டிய உதிரம் 13 நாளாக உள்ளது. இப்போது என்னுடைய மாதவிலக்கு 04-03- 15, எனொகி உதிரம் நிற்க்கவில்லை.ஆனால் கடந்த முன்று நாளாக ஒவ்வொரு துளியாக உள்ளது akka

இதை இப்படியே விட்டாலும் பிரச்சினை எதுவும் இல்லை. எப்படியும் உங்களால் மீதி நாட்களைப் போல இந்த நாட்களை இலகுவாக எடுத்துக்கொள்ள இயலாது இல்லையா? சிரமமாக இருந்தால் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். ஒழுங்காகுவதற்கு மாத்திரை கொடுப்பார்கள்.

7 நாட்கள் என்பதுவே பலருக்கு அதிகம்தான். உங்களுக்கு எப்பொழுதும் அப்படியேதான் இருந்திருக்கிறது என்பதால் பயப்படவேண்டியது இல்லை. எவ்வளவு இரத்தம் வெளியேறுகிறது என்பதைக் கவனிப்பது முக்கியம், உங்களுக்கு 7 நாட்களும் அதிக உதிரப் போக்கு இருந்திராது இல்லையா? சில நாட்களில் மிகவும் குறைவாக இருந்திருக்கும்.

உங்கள் நாட்குறிப்பிலோ அல்லது இதற்கெனத் தனியாக ஒரு சிறிய நாட்காட்டி வைத்துக்கொண்டோ உங்களுக்கு மாதவிடாய் வரும் நாட்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த நாட்கள் சாதாரணமாக இருக்கிறது, எப்போது அதிகம், எந்த நாட்களில் spotting மட்டும் இருக்கிறது என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றுக்கும் ஏதாவது அடையாளம் அல்லது நிறம் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை நான்கைந்து மாதங்கள் கழித்தோ ஒரு வருடம் கழித்தோ மருத்துவரிடம் போகும் நிலை வந்தால் அப்போது எதுவும் சரியாக ஞாபகம் வராது. இப்படிக் குறித்து வைத்திருப்பது நல்லது.

சாதாரணமாக ஒரு மாதம் இழக்கும் இரத்தத்தை உடல் தானாக அடுத்த மாதத்திற்குள் ஈடுசெய்துவிடும். உங்கள் ஆரோக்கியம் கெட்டுப் போகும் அளவு இழப்பு இருக்கக் கூடாது. வழமைக்கு மாறாக அதிகமாக இருக்கிறது; நிற்கவே இல்லை என்னும் போது மருத்துவரிடம் போவது நல்லது.

இப்போது பதின்மூன்று நாட்கள் என்கிறீர்கள். spotting மட்டும் இருக்கும் காலத்தை மாதவிலக்குக் காலமாகக் கணிக்க இயலாது. இந்த நாட்களிலும் கர்ப்பமாகச் சாத்தியம் இருக்கிறது என்பதை நினைவில் வைத்திருங்கள்.

‍- இமா க்றிஸ்

வனீஸ்... ;(( கேள்வியைப் பார்த்தேனே தவிர வாசுகி எங்கே கேட்டிருக்கிறார் என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டேன். மன்னிக்க வேண்டுகிறேன். ;((

‍- இமா க்றிஸ்

Oru pirechanaiyum illa imma :)

Vasugi.. copper t potirukingalaa? Potirundhaa infection aagi irukanu dr ta kaatidunga. Appadi irundhaa udhira poku adhigamirukkum. Blood test pannunga... hemoglobin kuraivaa irundhaalum ippadi aagum. Inj kodupaanga, normal aayidum. Edhuvaa irundhaalum udane paarpadhu nalladhu.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி இமா அக்கா.மான்னிக்கவும் எனக்கு எங்கு தேறிவிப்பது என்று தெறியவில்லை,அதனால் தான் வானி அக்காவின் குறிப்புகளில் அனுப்பினேன்.

நான் coppr t போடவில்லை வானி அக்கா. நாங்கள் இரண்டாவது குழந்தைக்கு முயற்சி எடுத்துகொள்கிறோம்

Appadinna kattaayam dr paarthudunga.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா