தேதி: March 18, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ப்ரான் - கால் கிலோ
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
முட்டை - 2
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கேரட் - ஒன்று ( துருவிக் கொள்ளவும்)
பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கவும்)
குடைமிளகாய் - ஒன்று (சிறுத் துண்டுகளாக நறுக்கவும்)
சாதம் - தேவையான அளவு
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3/4 தேக்கரண்டி
ப்ரானுடன் ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற விடவும்

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஊற வைத்த ப்ரானை சேர்த்து வதக்கி வேக விட்டு எடுக்கவும்.

அதே வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

முட்டை வெந்ததும் வெங்காயம், கேரட், பீன்ஸ், குடைமிளகாய் சேர்த்து அதிக தணலில் வைத்து கிளறவும்.

அதனுடன் மீதிமிருக்கும் ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து நன்கு கிளறவும்.

முட்டை, காய்கறி கலவையுடன் வதக்கி வைத்துள்ள ப்ரானை சேர்க்கவும்.

கடைசியாக சாதம், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

சுவையான ப்ரான் ஃப்ரைட் ரைஸ் தயார்.

Comments
பாலா
ரொம்ப கலர்ஃபுல் டிஷ்... :) ஐ லைக் இட்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி அட்மின்
குறிப்பை அழகாக வெளியிட்டமைக்கு நன்றி அட்மின்.
எல்லாம் சில காலம்.....
வனி அக்கா
தேங்க்ஸ் வனி அக்கா. இந்த ரைஸ் டிஃப்ரண்ட்டான டேஸ்ட்ல ரொம்ப நல்லா இருக்கும்.
எல்லாம் சில காலம்.....
Balanyahi
இன்னைக்கு நான் இந்த இறால் ப்ரைட் ரைஸ் தான் பன்னுனேன் நல்லா இருந்து. நன்றி