பாக்கர்வாடி

தேதி: March 19, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

கோதுமை மாவு - ஒரு கப்
கடலை மாவு - ஒரு கப்
எண்ணெய் - தேவைக்கேற்ப
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க:
கொத்தமல்லி - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - 4 கீற்று
மிளகு - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
எள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
கோதுமை மாவு மற்றும் கடலை மாவை கலந்து சிறிது உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த பொடியில் சிறிது கடலை மாவை சேர்த்து கலந்து வைக்கவும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை பூரி கட்டையால் தேய்த்து அதன் ஓரங்களை சதுர வடிவாக வெட்டவும்.
அதில் கடலைமாவு கலந்த பொடியை பரவலாக வைத்து இறுக்கமாக சுருட்டவும். சிறிது மைதா மாவை நீர் விட்டு கரைத்து ஓரங்களை ஒட்டி விடவும்.
பிறகு அதை கத்தியால் சிறிய துண்டுகளாக வெட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சுவையான பாக்கர்வாடி ரெடி.

இது மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எளிமையான‌ சுவையான‌ குறிப்பு செய்து பார்க்கிறேன்...

பாக்கர்வாடி பேரு எனக்கு புதுசா இருக்கே, ஈஸி ஸ்னாக்ஸ் ,,,சூப்பர்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

Nallaruku hrma. Snacks timeku nallarukum

Be simple be sample

Gud snacks. Inga idhu pola maidala onnu pannuvaanga... peyar theriyala. Idhu godhumaila healthya irukku.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா