சுப்ரமணிய புரம்

இது எட்டணா மற்றும் எதுவென்றாலும் சுருக்குப்பையில் பத்திரமாய் பதுக்கிவைத்த பாட்டியைப்போன்ற சிறுவயதில்
சேமித்து வைத்த நினைவுகளில் ஒன்று;

அது ஒரு காலம்!

செல்போனின் எண்ணிக்கையாய் சொல்லிக்கொள்ளும்படி பெரிய நெட்வொர்க் எதுவுமில்லை பொதிகையைத்தவிர....

ஒரு வானத்தில் ஒரே நிலவைப்போல எங்கள் தெரு பெரிய வீட்டில்
பொதிகை வருவதை பார்க்க மணப்பெண்ணை பார்ப்பதைவிட
மக்கள் கூட்டம் அதிகம்..

ஞாயிறுக்கிழமை வந்துவிட்டாலே வாசல்வெளியே நாக்கை தொங்கவிட்டபடி காத்திருப்போம்;

நாய்களும்
நாங்களும்

கொடுமை என்னவென்றால் நாய்க்கு மட்டுமே முதலாவதாக செல்ல முன்னுரிமை உண்டு

வீட்டின் எஜமானியோ வேலைக்காரியோ???

பெருங்கூட்டத்தின் எண்ணிக்கையால் பெருமூச்சு விட்டபடி "எல்லோரும் சாப்டுட்டு அப்பறமா வாங்க" என

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ப்யூனாய் அடிக்கடிவந்து முன்னெச்செரிக்கையாய் முன்னறிவிப்பு செய்துவிட்டு போவார்கள்

ஹா ஹா ஹா ...

அது ஒரு காலம்!

அப்போதெல்லாம்
அவமானம் என்பது மணலில் அமர்ந்தெழும் போது ஒட்டிக்கொண்ட மண்கள்;

உடலை உலுக்கி உடனே உதிர்த்து விடுவோம்!

இப்போதெல்லாம் நறநறனு எத்தனை செய்தி வாசிப்பாளர்கள் ஆனால் அப்போது ஷோபனா ரவி பாத்திமா பாபுவை தவிர்த்து பரிட்சயமானவர்கள் பாவம் வேறு யார்??

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்