தேதி: March 20, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மைதா மாவு - அரை கப்
துருவிய சீஸ் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
மைதாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவை போல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

பிசைந்த மாவை வட்ட வடிவில் அப்பளங்களாக திரட்டிக் கொள்ளவும்.

சீஸ் மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலந்து வைக்கவும்.

திரட்டிய அப்பளத்தை அரை வட்ட வடிவில் பாதியாக கத்தியால் வெட்டி ஒரு பக்கத்தில் சீஸ் ஸ்டஃபிங் வைக்கவும்

மறுபக்கத்தால் மூடிவிட்டு ஓரங்களை ஒரு ஃபோர்க்கினால் அழுத்தி விடவும்.

பூரிகளை சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

குழந்தைகளுக்கு பிடித்தமான சீஸ் ஸ்டஃப்ட் பூரி தயார். இதனுள்ளே சீஸ் மற்றும் சர்க்கரை இரண்டும் உருகி கலந்திருப்பது நல்ல சுவையாக இருக்கும்.

Comments
vaany
Peru maariduchu :) vani kuzappam ini enakkillai. Kurippu super.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
vaany
Vaniselwin or vaany
வாணி
யம்மி டிஸ் சூப்பர் வாணி.. கலக்கல்..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
வாணி
ரொம்ப நல்லா இருக்கு. குழந்தைக்காக ரொம்ப மெனக்கெடுவீங்களோ? இப்டி டிஷ்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களோ?
எல்லாம் சில காலம்.....
vaany
Supera iruku vaany. Simply super
Be simple be sample