
அன்புள்ளம் படைத்த அறுசுவையினருக்கு வணக்கம் _()_ :) நலம், நலமே விழைக!!
நீண்ட நாட்கள் கழித்து ஒரு பதிவுடன் சந்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். பிடிக்கலேனாலும் வேறு வழியில்லை படிச்சு வைய்ங்க எப்பவாது பிடிக்கும்.
மிதிவண்டி அதாங்க பைசைக்கிள். பாருங்க பேர்லயே வாங்க சொல்லி இருக்கு. இதிலிருந்தே புரிஞ்சிருப்பீங்க என்ன சொல்லவறேனு.
நாம எத்தனையோ விஷயங்களை மறந்திருப்போம். அதில இந்த நீச்சல், சைக்கிள் ஓட்டுறது, அச்சாங்கல் ஆடுறது இத்யாதி..இதயாதி.. இதெல்லாம் அடங்கும்.
இதில மறந்திருப்போம்னு சொல்றதைவிட அதற்கான வாய்ப்புகள் நமக்கு உண்டாகாமலோ, உண்டாக்கிக்கொள்ளாமலோ இருந்திருப்போம்.
ஏன்? இப்ப மறுபடி இதில் ஏதேனும் ஒன்றை தினசரி பழக்கமாக்கிக் கொள்ளக்கூடாது என்ற நினைப்பு திடீர்னு தோணுச்சு.
என்னவர் அலுவலகம் செல்வதற்காக ஒரு வருடம் இருக்கும்னு நினைக்கிறேன், ஒரு சைக்கிள் வாங்கினார்.
ஆனா பாருங்க நம்மூர் சாலையில் இதெல்லாம் சாத்தியமாகமல் சும்மாவே நின்னுச்சு. இப்ப ஒரு சில வாரங்களா எங்க வீடு இருக்கும் சாலையிலேயே தினமும் காலை, மாலை சைக்கிளெடுத்துட்டு கிளம்புவார். உடனே எனக்குள் உறங்கிக்கிடந்த சைக்கிள் ஓட்டுனி முழித்துக்கொண்டு நீயும் சைக்கிள் ஓட்டு, நீயும் சைக்கிள் ஓட்டு என்று சதா கூவிக்கொண்டே இருந்தார்.
கியர் வெச்ச சைக்கிள்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுனு அவரோடத சும்மா தூசு தட்டி வைப்பதும். தள்ளிப்பார்ப்பதுமாகவே இருந்தேன்.
கடந்த வாரம் திடீர்னு ஒருநாள் சன்ரைஸ் பார்க்க வெளிய வந்தப்ப சர்ப்ரைஸா சைக்கிள் இருந்துச்சு. கண்ண கறுப்புத் துணியால கட்டி அழைச்சிட்டு வந்து, சைக்கிள்ல முழிக்கவெச்சார்னுலாம் சொல்லத்தான் ஆசை, ஆனா பாருங்க அப்படிலாம் ஏதும் நடக்குல.
எந்த சைக்கிள், எந்த கலர்னு பலமுறை ஆலோசனை செய்து அழகான ஒரு சைக்கிள் எனக்கே எனக்குனு வாங்கிக்கொடுத்தார்.
என்னமோ தெரில ஸ்கூட்டர் வாங்கினப்போ கூட இவ்வளவு மகிழ்ச்சி உண்டாகல.
சைக்கிள் வந்தப்புறம், இல்லாத தூசிய இருக்கிறாப்பிலயே தொடைக்கிறது.
தினமும் போட்டோ எடுக்குறதுமா ஒரே சந்தோஷம்.
தினமும் மாலைவேளை என்மகளும் நானும் சைக்கிள் சவாரிதான். அவருக்கு கியர்சைக்கிளாலாம் ஒரு பொருட்டல்ல, நல்லாவே ஓட்டுறாங்க.
எதுக்கு நான் இதனை ஒரு பதிவா போடுறேனா, சிலதெல்லாம் நாம ஒருசில வயசுக்கு அப்புறம் செயல்படுத்துவது இல்ல. அட போப்பா இத்தன வயசுக்கப்புறம் எப்ப சைக்கிள் பழகி ஓட்டி, இல்ல சின்ன வயசில ஓட்டுனத நினைவுபடுத்தி, அதை செயல்படுத்தினு நம்ம மனசு நம்மள செயல்படுத்த விடாம முடக்க பார்க்கும். அங்கதான் நாம விடாப்பிடியா இருக்கணும்.
ஏன் ஓட்டமுடியாது? ஏன் ஓட்டக்கூடாதுனு நம்மள நாமளே கேள்வியா கேட்டு துளச்சு எடுக்கணும். சில நல்ல அழகான விஷயங்களை பெண்கள் (எல்லோருமல்ல,) தொடர்ந்து செயல்படுத்தறதே இல்லையோனு தோணுது.
நீ அப்படினா, நாங்களாம் அப்படி இல்லேனு சொல்றவங்கள் இந்த பதிவினை அப்படியே ஸ்கிப் செய்துடுங்க.
என்னைப்போன்று ஒரு சிலரேனும் இருந்தால், அவர்களுக்கான பதிவு இது.
அகமும் புறமும் ஆரோகியத்துடன் இருந்திட சைக்கிள் ஒரு நல்ல உபகரணம்.
இப்பலாம் காய்கறி ஃப்ரிட்ஜ்ல வாங்கி வெக்கிறதில்ல, தினமும் சென்று வாங்கிடுறேன். நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வது நம்கையில்தான் இருக்கிறது.
மனதினை ஒருநிலைப்படுத்தவும், கவலைகளை ஒதுக்கி வைக்கவும், உடல் ஆரோக்கியத்தினைப் பேணிபாதுகாக்கவும் சைக்கிள்சவாரி ஒரு நல்ல உடற்பயிற்சி +மனப்பயிற்சி!!
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல, வீட்டிற்கு இரு சைக்கிள் வாங்குவோம்னு சொல்லலாம்.
அடடா எல்லாரும் எங்க கிளம்பிட்டீங்க சைக்கிள் வாங்கவா??
வாழ்க்கையை அழகாக்கிட இது போல் குட்டி குட்டி மகிழ்ச்சிகளை வரவழைத்துக் கொள்வோம்.
நன்றி!!
Comments
arul
Welcome back arul :) naanum ninga sonnadhai ethukaraen...
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
மிகவம் நன்றாக உள்ளது
எல்ேலாரும் ெசய்ய ேவண்டிய காாியம்
சைக்கிள்
சூப்பர் இடுகை அருள்.
இமா என்றால் சைக்கிள் என்று இருந்த காலம் ஒன்று இருந்தது. எட்டு வயசு தொடக்கம் சைக்கிள் சவாரி. ஊர்ல சைக்கிளை சொந்த வாகனமா வைச்சு தினமும் ஓடிட்டிருந்த முதல் பொண்ணு நான்தான். பிறகு மோட்டர்பைக்... அதுவும் முதலில் நானே. இப்போ திரும்பிப் பார்க்க அப்போ புரியாத சில விஷயங்கள்... இப்ப புரியுது. :-)
//அட போப்பா இத்தன வயசுக்கப்புறம் எப்ப சைக்கிள் பழகி ஓட்டி// :-) ரசிக்கக் கூடிய விடயங்களுக்கு வயசு பார்க்கக் கூடாது.
இங்க... இந்த ஊர்க் காலநிலை, தூரம் எல்லாம் பார்க்க, தினமும் சைக்கிள் என்கிறது சாத்தியமில்லை. ;( சில தெருக்களில் சைக்கிள், நடைபாதை கிடையாது. ;( பொழுதுபோக்கிற்காக ஓடுவதானால் சைக்கிள் வைத்திருக்கலாம். நிறையவே மிஸ் பண்ணுறேன். அதற்கு ஈடு கட்டுமாப் போல நிறைய நடக்கிறேன். ஊரில் இப்படி சுதந்திரமாக பயமில்லாமல் தனியாக நடக்க முடியாது. அது இங்கு கிடைக்கிறது.
- இமா க்றிஸ்
cycle
2Hai நாங்கல் சென்ற வருடம் 2 months europe tour (cruising)சென்று இருந்தோம். ஆங்கு எங்கு பார்த்தாலும் அனைவரும் சைக்கிளில் பயணம் செய்தார்கள். School, office, போன்றவற்றிற்கு கூட. ரோடும் அவ்வளவு free-அ இருந்தது. நம் நாட்டில் அது சாத்தியமா என்று தெரியவில்லை. Super-அ இருக்கு
மிதிவண்டி
அருள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்க பதிவைப் பார்க்கறது மிகவும் சந்தோஷமா இருக்கு.
நீங்க ஏற்கனவே ஒரு பதிவில் உங்க கணவரோட சைக்கிளைப் பற்றி சொல்லியிருந்தீங்க....நம்ம ஊர் டிராஃபிக்ல எப்படி சாத்தியமாகுதுன்னு யோசித்ததுண்டு! அதுக்கு இந்த பதிவில் பதில் சொல்லிட்டீங்க...இப்ப என் கணவர் சைக்கிளில்தான் ஆஃபீஸ் போறார்! நம்ம ஊர்லயும் சைக்கிள்க்கான தனிப்பட்ட பாதை இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்!!
//வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல, வீட்டிற்கு இரு சைக்கிள் வாங்குவோம்னு சொல்லலாம்// பெட்ரோல் பிரச்சனையாவது தீரும்....:)))
சைக்கிள் ஓட்டறது என்னோட நிறைவேராத ஒரு ஏக்கம்னே சொல்லலாம்! எல்லாரும் சைக்கிளில் பள்ளி செல்லும் வயதில், எனக்கு ஹாஸ்டல் வாழ்க்கை ஆரம்பமாயிடுச்சி.அதன்பிறகு சைக்கிள் கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பமே வரலை!!
நீங்க என்ஜாய் பன்னுங்க அருள்......:)))
அருள்
Naan epavum nadaraja service than (,walking). Henna cycle kuda otta theriyathu
Be simple be sample
அருள்
//நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வது நம்கையில்தான் இருக்கிறது.// உண்மை நானும் அடிக்கடி இப்படி நினைத்துக் கொள்வேன்.
சைக்கிள் விட எனக்குத் தெரியாது அருள். ஆனால்,நான் முன்னால் அமர்ந்து என்னவருடன் டபுள்ஸ் போக ஆசையாக இருக்கின்றது.:)
vani
மிக்க நன்றி வனி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
லதா
லதா மிக்க நன்றி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
இமா
மிக்க நன்றிங்க இமா :)
//பிறகு மோட்டர்பைக்..// கியர் போட்டு ஓட்டுறதா? இன்னும் கூட இங்கெலாம் இது ஆச்சர்யமாக பார்க்கும் விசயமே. சாலைகளில் எப்பவாவது இது போன்ற வண்டி ஓட்டுபவரை பார்ப்பதே அரிது.
என் மகளின் வகுப்பு ஆசிரியை பைக்கில் வருகிறார், அதனால் மகளுக்கும் பைக் ஓட்டவேண்டும் என ஆசை:)). ஆசிரியை பைக்கில் வருவதை தினமும் சிலாகித்துக் கூறிக்கொண்டே இருக்கிறார்.
எனக்கு டிவிஎஸ் 50, ஸ்கூட்டி டைப் வண்டிதான் ஓட்டத்தெரியும் :)
//ரசிக்கக் கூடிய விடயங்களுக்கு வயசு பார்க்கக் கூடாது. // ஆம், தங்களின் கூற்று மிகச்சரி.
இன்னொருமுறை சிறுமியாகியா ஓட்டமுடியும். அதே போல தீம் பார்க்கில் உயரத்தில் இருந்து சறுக்கிட்டு வரது, ஜெயிண்ட் வீல் இதெல்லாமே பிடிக்கும். நீச்சல் மட்டும் அரைகுறை என்பதால் தண்ணி ஆழமாக இருக்கும் சறுக்கலில் போக பயமாக இருக்கும். நீர் குறைவான ஆழத்தில் இருக்கும், வளைந்து வளைந்து, குகை போல போகும் சறுக்குகளெல்லாம் கூட போவேன் :)
//பொழுதுபோக்கிற்காக ஓடுவதானால் சைக்கிள் வைத்திருக்கலாம். நிறையவே மிஸ் பண்ணுறேன். // எப்ப வாங்கப்போறீங்க :))
//அதற்கு ஈடு கட்டுமாப் போல நிறைய நடக்கிறேன்.// இருந்தாலும் சைக்கிளிங்க்கு ஈடாகுமா??:))
கருத்துரைக்கு மிக்க நன்றிங்க இமா :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
ஸ்ருதி
ஸ்ருதி மிக்க நன்றி :) ஆமாம்பா, நம்மூர் சாலை மட்டும் தெளிவானதாக இருப்பின் பள்ளி மோட்டார் வாகனத்தேவையே பாதி குறைந்துவிடும். அலுவலகத்திற்கு செல்வோரும் இதனையே பயன்படுத்துவர். சுற்றுப்புற சூழலும் மாசுபடாமல் பாதுகாக்கப்படும்.
நடை பயணமே செல்ல முடியாத நிலையில் சைக்கிள் பயணம் கஷ்டம்தான்.
//நாங்கல் சென்ற வருடம் 2 months europe tour (cruising)சென்று இருந்தோம்// மறக்கமுடியாத இனிய நினைவுகளாக இருந்திருக்கும் இல்லையா:))
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அனு
அனு மிக்க நன்றி :) ரொம்ப பக்கத்தில இருந்தாலும் சைக்கிள்ல போகமுடியாத அளவு ட்ராஃபிக்பா:(
//பெட்ரோல் பிரச்சனையாவது தீரும்....// கண்டிப்பா, நிறைய நிறைய நல்ல விசயம் நடக்கும். ஒபிஸிட்டி குழந்தைகளை பார்க்கவே முடியாது. முழங்கால் வலி பிரச்சினை முதியவங்களுக்கு வர முன்னாடி இளைஞர்களுக்கு எட்டிப்பாக்குது. அதும் குறையும். முட்டிகளுக்கு வேலையே அளிக்காம பத்ரமா வெச்சிட்டு இருக்கிறதும் முழங்கால் வலி வர காரணங்கள்ல ஒன்றுனு சமீபத்தில படிச்சேன்.
//சைக்கிள் ஓட்டறது என்னோட நிறைவேராத ஒரு ஏக்கம்னே சொல்லலாம்!// இனி நிறைவேத்திடுங்க அனு. பழகுறது ஒண்ணும் பெரிய விஷயமேயில்ல. குட்டி சைக்கிள் இருந்தா, இருக்கும்னு நினைக்கிறேன், கால்பந்தாட்ட வீரர் சைக்கிள் இல்லாம இருப்பாரா? கெஞ்சிக்கேட்டு இரவல் வாங்கி பழகிடுங்க.:))))) பேலண்ஸ்டு வீல் இருந்துச்சுனா இன்னும் ஈஸியா பழகிடுலாம். அதிக பட்சம் ஒருவாரத்தில பழகிடுவீங்க பாருங்க. மிக்க மகிழ்ச்சி அனு :))
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
நிகி
நிகி மிக்க நன்றி :)
ஆனால்,நான் முன்னால் அமர்ந்து என்னவருடன் டபுள்ஸ் போக ஆசையாக இருக்கின்றது.:)// ஆஹா..... இதெல்லாம் உங்களவரும் படிப்பாரா நிகி :) உங்க பதிவு படிச்சவுடனே முகமறியாமலே நீங்க சைக்கிள்ல முன்னாடி அமர்ந்து போறது கற்பனைல வந்து போகுது.
//சைக்கிள் விட எனக்குத் தெரியாது அருள்.//உங்களுக்கும் அனுவிற்கு போட்ட பதிலேதான். சீக்கிரமே பழகுங்க.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
yes
Yes very very happy moments
அருள்
//குட்டி சைக்கிள் இருந்தா, இருக்கும்னு நினைக்கிறேன், கால்பந்தாட்ட வீரர் சைக்கிள் இல்லாம இருப்பாரா? கெஞ்சிக்கேட்டு இரவல் வாங்கி பழகிடுங்க// அப்படிகூட யோசித்ததுண்டு....ரொம்ப குட்டி சைக்கிளிலிருந்து, கியர் வெச்சு சைக்கிள்க்கு டைரெக்டா ஜம்ப் பன்னிட்டாங்க.....அந்த குட்டியூன்டு சைக்கிளையும் வீட்டில் இடமில்லைன்னு குடுத்தாச்சு.......அவ்வ்வ்வ்
சைக்கிள்
சின்ன வயதிலே ஹாஸ்ட்டல் போய்விட்டதால் எனக்கும் சைக்கிள் பழகும் சந்தர்ப்பம் கிடைக்காமலே போய் விட்டது அருள். பின்னால் ஸ்கூட்டி பழகும் சந்தர்ப்பமும் அமையவில்லை. எனக்கும் அது ஒரு நீங்கா குறையாகவே இருந்து கொண்டு வருகிறது. கலர் கலரா சீருடை அணிந்து என்னைப் போன்ற பள்ளி மாணவிகள் சைக்கிளில் பள்ளிக்கு வருவதை ஏக்கத்தோடே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன் :((
அதினால் தான் என்னமோ என் மகளுக்கு அதிக சிரத்தை எடுத்து சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுக்கிறேன்.
இப்போதும் இங்கே எல்லோரும் சைக்கிள் ஓட்டி செல்வதைப் பார்க்க அழகாக இருக்கும்.
என்னவர் கேட்ப்பார், இப்போத்தான் உனக்கு வாய்ப்பிருக்கே, பழகிக்கோன்னு, ஆனா பாருங்க நேரமில்லை என்றொரு பதிலை உதிர்த்து கொண்டேயிருக்கிறேன். இங்கு Trailgator cycle என்ற ஒன்று உள்ளது. முன் செல்லும் சைக்கிளோடு ஒட்டிக் கொண்டு தொடர்ந்து பின்னால் ஓட்டி வரும் சைக்கிள். அதையாவது வாங்கி ஓட்டி நீண்ட நாள் ஆசையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளேன். சரி என்ற பதிலும் வந்துள்ளது. பார்க்கலாம். :)
போன வருஷம் இதே சமயத்தில் தான் என்று நினைக்கிறேன், செல்வி மேடம் சைக்கிள் பழகியதைப் பற்றி ஒரு இடுகை போட்டிருந்தார்கள். அப்பவே எனக்கு ரொம்ப பீபீபீலீலீலீங்ங்காயிருந்தது. :(( அதற்க்கப்புறம் இப்போ நீங்க வேற உள்ளே உறங்கிக் கொண்டிருந்த பீலிங்கை தட்டி எழுப்பி விட்டீங்க :)) ம்ம்ம்ம், பரவாயில்ல, மறுபடியும் தூக்க மாத்திரை கொடுத்து தூங்கப் போட்டுடறேன்.
அது சரி.... \\அச்சாங்கல் ஆடுறது // அப்படின்னா என்னவோ??!
அனு
அனு கேட்கவே கொஞ்சம் சோகமாத்தான் இருக்கு. இந்த சைக்கிளை முயற்சி செய்து பாருங்க. "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" :))
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
வாணி
வாணி நீங்களும் சைக்கிள் பழகலையா?
// முன் செல்லும் சைக்கிளோடு ஒட்டிக் கொண்டு தொடர்ந்து பின்னால் ஓட்டி வரும் சைக்கிள். // நீளமா இருக்கும், ரெண்டு சீட் ஒண்ணு போலவே, ரெண்டு பெடல் இந்த சைக்கிளா நீங்க சொல்றது. கொடைக்கானல் லேக் சுத்தி இத ஓட்டி இருக்கோம்.
ஆமாம் எனக்கு செல்வி மேடமோட சைக்கிள் இடுகை ஞபாகம இருக்கு. எல்லாரோட மலரும் நினைவுகளையும் மலரச்செய்த இடுகை அது.
//மறுபடியும் தூக்க மாத்திரை கொடுத்து தூங்கப் போட்டுடறேன். // தப்பு, தப்பு :)) முழிச்சிட்டே இருக்க வைங்க.
அச்சாங்கல்:
ஐந்து கற்களை கீழே பரவலாக போட்டு, ஒரு கல்லை கையிலெடுத்து மேலே வீசி விட்டு அது கீழே விழும் முன்பாக கீழிருக்கும் கல்லை எடுத்துவிடவேண்டும். அதில் நிறைய சுற்றுகள் உண்டு. இது கண்களுக்கு மிகச்சிறந்த பயிற்சி.
புரிந்ததா தோழி :))
மிக்க நன்றி வாணி :)
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)
அன்புடன்
அருள் சிவம்.
அச்சாங்கல்
\\வாணி நீங்களும் சைக்கிள் பழகலையா?// சாதாரணமாகத்தானே கேட்டீங்க ?!! நக்கல்ஸ் இல்லையே ?? :))
\\நீளமா இருக்கும், ரெண்டு சீட் ஒண்ணு போலவே, ரெண்டு பெடல் இந்த சைக்கிளா நீங்க சொல்றது// இரண்டு தனித்தனி சைக்கிள் தான் அருள் இரண்டையும் நீளமான ஒரு பைப் போன்ற (Trow bar) ஒன்றினால் இணைத்திருப்பார்கள். நமக்கு பின்னால் மற்றுமோரு சைக்கிளையும் மற்றோரு Trow bar கொண்டு இணைத்துக் கொள்ளலாம். இப்படியே ஒரு குடும்பமே ( சிறியவர்கள் உட்பட) செல்லலாம். நீளமாகத்தான் இருக்கும் . முதலில் ஓட்டுபவருக்கு மட்டும் ஓட்ட தெரிந்திருப்பது அவசியம். ஆக்ஷுவலா நாம் அந்த நடுவில் இணைக்கும் Trow bar மட்டும் வாங்கிக் கொண்டால் போதும்.
\\அச்சாங்கல் // எங்க ஊர்ல "சுட்டிக் கல்". மறக்க முடியுமா இதை?? பெரும்பாலும் ஜல்லி கற்களைத்தான் நாங்க பயன் படுத்துவோம். பெஸ்ட் இன்டோர் கேம். கற்கள் கொஞ்சம் கூர்மையா இருந்தாலும் சொரசொரப்பான தரையை கண்டுபிடித்து அதில் கற்களின் கூர்மையான பகுதியை உரசி ஷேப் ஆக்குவோம்.
விளையாடுகையில் ராகமிட்டுக் கொண்டே கற்களை எண்ணுவோம். இப்போ யோசித்து யோசித்துப் பார்க்கிறேன் அருள், பல சுற்றுக்கள் நினைவிற்க்கு வர மட்டக்கிறது.
எனக்கு ரொம்ப பிடித்த இந்த விளையாட்டை நினைவுப் படுத்தியதற்க்கு நன்றிகள் பல:))
பைக்
//மோட்டர்பைக்..// கியர் போட்டு ஓட்டுறதா?// இல்லை அருள், யமஹா மேட் 50 அது. //டிவிஎஸ் 50, ஸ்கூட்டி // மொபட், சலி எல்லாம் எங்கள் ஊருக்குள் வர முற்பட்ட காலம் நான் ஓட ஆரம்பித்தது. அப்போ ஆண்கள் மட்டும்தான் ஓடிட்டு இருந்தாங்க. பெண்கள் என்றால், என்னைத் தவிர ஒரு சிங்கள மீன் விற்கும் பெண் மட்டும் மீன் பெட்டி கட்டி ஓடிக் கொண்டிருந்தார். :-))
//எப்ப வாங்கப்போறீங்க :))// எப்பவாவது திரும்ப இலங்கைக்குப் போய் செட்டில் ஆகுறதா இருந்தா அப்போ. ;) ஆறு வயசில் ஓட ஆரம்பிக்கும் போது ஒரு குட்டி ஹீரோ இருந்தது. நான் வளர அப்பா அதன் சீட் தண்டுக்கு ஒரு நீளமான துண்டு வெல்ட் செய்து கொடுத்தார். :-) பிறகு... ஒரு பச்சை ரோட்ஸ்டர் (ஆண்களுக்கானது), ஒரு நீல சாப்பர், பிறகு ஒரு அரை சைஸ் ஏஷியா (லேடீஸ்) கடைசியாக ஊரில் விட்டுவிட்டு வந்ததவை பெரிய சைஸ் ஏசியா லேடீஸ் சைக்கிளும் என் மேட் 50யும்.
எப்போதாவது ஆட்டோ ஓட்டிப் பார்க்கவேண்டும் என்று ஆசை. அடுத்த தடவை இலங்கை போகும் போது முயற்சி செய்யப் போகிறேன். :-)
- இமா க்றிஸ்
ஆட்டோ இமா :)
சைக்கிள் கேப்புல ஆட்டோ :))