மேத்தி புலாவ்

தேதி: March 21, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பாசுமதி அரிசி / பச்சரிசி - 1 1/2 கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 3
வெந்தயக்கீரை - 2 கப்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6 பல்
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
உப்பு
தாளிக்க:
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
சீரகம் - கால் தேக்கரண்டி


 

வெந்தயக்கீரையை சுத்தம் செய்து அலசி நறுக்கி வைக்கவும். அரிசியை சுத்தம் செய்து கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். இஞ்சி பூண்டை அரைத்து வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து முக்கால் பதம் வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் சாம்பார் பொடி அல்லது மிளகாய் + தனியா தூள் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
அதில் தக்காளி, கொத்தமல்லித் தழை, வெந்தயக்கீரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து பிரட்டவும்.
தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை நீர் இல்லாமல் வடித்துவிட்டு சேர்க்கவும். மீண்டும் கொதி வந்ததும் சிறு தீயில் வைத்து மூடி வேக விடவும்.
வெந்ததும் எடுத்து பக்குவமாக கிளறி ரைதாவுடன் பரிமாறவும். சுவையான மேத்தி புலாவ் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அறுசுவையில இப்ப ஒரே புலாவு சீசன் போல :))
எங்க வீட்டிலும் இப்பல்லாம் அடிக்கடி புலாவுதான். செய்ய எளிதாக, வேலையும் குறைவாக இருப்பதினால்.
மேத்தியில இதுவரை செய்ததில்லை. பாலக் கீரையில் செய்வேன்.
சிம்பிளி ஹெல்த்தி ரெசிப்பி. :))

Thanks Vaany.. try pannippaarunga. Indha methodla pannaa kasapu irukaadhu.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா