தம் சிக்கன் பிரியாணி

தேதி: March 21, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (7 votes)

திருமதி. ரேவதி அவர்களின் தோழி வீட்டு விசேஷத்தில் இஸ்லாமிய பெரியவர் ஒருவர் சமைத்த சிக்கன் பிரியாணி செய்முறையை நமது அறுசுவை தோழிகளுக்காக படம் எடுத்து நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

சிக்கன் - ஒரு கிலோ
பாசுமதி அரிசி - ஒரு கிலோ
வெங்காயம் - 350கிராம்
தக்காளி - 350 கிராம்
இஞ்சி - 75 கிராம்
பூண்டு - 75 கிராம்
பச்சைமிளகாய் - 8
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
புதினா, கொத்தமல்லி - தலா அரை கட்டு
எலுமிச்சை பழம் - ஒன்று
கேசரி பவுடர், உப்பு - தேவையான அளவு
தயிர் - அரை கப்
தாளிக்க :
எண்ணெய் - 200 மி.லி
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 4


 

அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி ஏலக்காய், லவங்கம், பட்டையை உடைத்து சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி தனித் தனியாக அரைத்த இஞ்சி விழுது மற்றும் பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் தக்காளி சேர்த்து, சிறிது உப்பு போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் 3 டம்ளர் வெந்நீர் ஊற்றி 10 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
பின்னர் அதில் சிக்கன் சேர்த்து கலந்து உப்பு, தேவையெனில் மிளகாய்த் தூள் சேர்த்து, பாதி எலுமிச்சை சாறை பிழிந்து தயிர் சேர்த்து கலந்து மூடி மிதமான தீயில் வேக விடவும். நடுவில் சிக்கனை அடிக்கடி கலந்து விடவும்.
இது தயாராகும் போதே மற்றொரு அடுப்பில், அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் புதினா, மீதி எலுமிச்சை சாறு, உப்பு, கேசரி பவுடர் சேர்த்து தண்ணீர் சலசலவென்று கொதிக்கும் போது 10 நிமிடம் ஊற வைத்த அரிசியை சேர்த்து கலந்து விடவும்.
அரிசி போட்டு கொதி வந்து 5 நிமிடம் கழித்ததும் அரை வேக்காட்டில் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
வடித்த சாதத்தை சிக்கனில் சேர்த்து ஒரு முறை மெல்லமாக கலக்கவும். அதன் பின்னர் கரண்டியின் பின் பாகத்தால் சிக்சாக்காக ( zigzag ) கலந்து விடவும்.
அந்த பாத்திரத்தை தட்டு போட்டு மூடி வடித்த கஞ்சி பாத்திரத்தை மேலே வைக்கவும். அடுப்பில் செய்வதாக இருந்தால் அடுப்பில் இருக்கும் தனலை எடுத்து தட்டில் போட்டு விடலாம்.
அரை மணிநேரம் தம்மில் விட்டு பின்னர் திறந்து சுற்றிலும் ஓரங்களை மட்டும் கரண்டியால் எடுத்து விடவும். கிளற கூடாது.
சுவையான சிக்கன் பிரியாணி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Kalakaringa ponga :) verenna solla.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிரியாணி ஸ்டெப் பை ஸ்டெப் ஆக‌ விளக்கத்துடன் படங்களும் அழகா எடுத்திருக்க‌ :)

"எல்லாம் நன்மைக்கே"

super biriyani revs.seithu sapitu than pathive podaren.vaniyoda karaikudi chicken curry yoda sema compi. Thanx for the recipe.congrats my dear rev..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

Photo azaga edit seithu veliyitta Anna& team thanku so mach

Be simple be sample

Thanku vani.

Thanku packia.

Thanku so mach sumi. Really sama taste intha method.

Be simple be sample

செம பிரியாணி இதை மட்டனில் செய்தேன் சூப்பரா இருந்துச்சு 2 கிலோ அளவில் செய்தேன் போட்டோ முகப்புத்தகத்துல போடுறேன் ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Innaiku unga method la briyani pannaen. Ellaarum nallaa irukkunnu sonnaanga :) thanks a lot. Colour mattum serkala. Sorry time illaama photo eduthu poda mudiyala. Adutha murai kandippa photo poduren revs.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தாங்யூ சுவா. எவ்வளவு செய்தாலும் மிஸ் ஆகாமா பயம் இல்லம செய்யலாம்.

Be simple be sample

போட்டோ இல்லனா பரவாயில்ல வனி. செய்து பார்த்துட்டு சொன்னதுக்கு தாங்க்ஸ்.அடுத்த முறை கலர் சேர்த்து செய்ங்க. மைல்டான ஆரஞ்சு பார்க்கும்போதே ஆசையை தூண்டும் வனி.கடையில் வாங்கும் பிரியாணி போல். ;)

Be simple be sample

நீங்க சொல்வது ரொம்ப உண்மை. ஆனா போன வீகெண்ட் வெளீயே போன போது அசைவம் தவிற வேறு ஒன்றும் பிடிக்காம சிக்கன் பிரியாணீயாவே சாப்பிட்டாங்க. வீட்டு சாப்பாடு கலர் போட்டா விரும்ப மாட்டார். அதான் ரெஸ்டாரண்ட் ஸ்டைலா இல்லாம இருக்கட்டும் என்று சேர்க்கல. ;) நான் சைவம்... அதனால் சுவை பார்க்கல. அவங்க எல்லாம் நல்லா இருக்கு என்றாங்க. அடுத்த மாதத்தில் செய்து பார்த்து மீண்டும் படத்தோடு பதிவிடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ம்ம் ஆமா கலர் சேர்க்கலனாலும் நல்லதுதானே. ரியலி இந்த பிரியாணி மெத்தட் அந்த பெரியவர்க்கு தான் தான்க்ஸ் சொல்லும். அவர் போட்டோ எடுக்க விட்டாரே. என்ன நீங்க சாப்பிடலயா :o . சைவத்துக்கு மாறிட்டிங்களா.

Be simple be sample

Intha method la biriyani try panunen sis. Taste superb. Pasanga luku romba pidichu thu .
Thanks for ur recipe sis!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Enna neenga vegetarian a. Non veg sapdamatingala. Ellarukkum vitha vithama samaichu asathura enga vanitha mam ch.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Ippadilaam solli shock koduka kudaadhu. Andha oru month viradham. Thursday oru naal dhaan vazakkamaa vani saivam. Marra ellaa naalum non veg saapiduven. Andha month fulla oru viradham... so appa mattum saivam.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Is it k. Nanthan biriyani sapdala nu suddena parkkavum shock ahiten. Ok sis continue ur policy. Bye.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

ரொம்ப தான்க்ஸ்ப்பா. செய்து பார்த்து தவறாம வந்து சொன்னதுக்கு .

Be simple be sample

Adhellaam mercy correcta irupaanga revs :) appadi dhanae mercy?? ;) naan non veg piriyai mercy... enakku dhinam non veg naalum pidikkum.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

M athaney parthen. Non veg thana k k nalla tham katti rasithu alavodu saptu alaga irukka vazhthukal.

Sure sis. Nan enna recipe try pannalum namma website parthu thana. Try pannatha sollanum la.
Enna laptop ipo illa. Mobile la type pandrathey enakku pidikkathu.
Already Nama thalaivali(headache ) casu. Athanala than sariya varamudiyala. But miss u all & ur comments.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!