தேதி: March 23, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மீன் - கால் கிலோ
தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - 5
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
தனி மிளகாய்த் தூள், குழம்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பூண்டு (தோலுடன் நசுக்கி போடவும்), உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவை விட சற்று கெட்டியாக கலந்துக் கொள்ளவும்.

இந்த மசாலாவில் மீனை சேர்த்து நன்கு பிரட்டி அரைமணி நேரம் ஊற விடவும்.

தோசை கல்லில் (நாண் ஸ்டிக் வேண்டாம்) 2 தேக்கரண்டி எண்ணெயை சுற்றி ஊற்றி காய விடவும். அதில் மீனை சுற்றி அடுக்கி மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெயை சுற்றி ஊற்றவும்.

மீன் ஒரு புறம் வெந்த பின்னர் திருப்பி போட்டு மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெயை சுற்றி ஊற்றவும்.

வெந்ததும் எடுத்து பரிமாறவும். மீனை ரொம்ப வேக விட வேண்டாம். சுவையான எண்ணெய் குறைவான மீன் வறுவல் தயார்.

Comments
மீன் வறுவல்
மீன் வறுவல் குறிப்பு ஈஸியா இருக்குங்க பாலா. எனக்கு 2 பீஸ் பார்சல்
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela
bala
Simple spicy fish :) naan try pannitu solren.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
bala
Parkavey nallaruku super.
Be simple be sample
நன்றி அட்மின்
குறிப்பை அழகாக வெளியிட்ட அட்மினுக்கு நன்றிகள் பல
எல்லாம் சில காலம்.....
ஷீலா
நன்றி ஷீலா. உங்களுக்கு இல்லாமலா? ஃபுல் ப்ளேட் எடுத்துக்கோங்க.
எல்லாம் சில காலம்.....
வனி அக்கா
கண்டிப்பா செய்து பாத்துட்டு சொல்லுங்க. ரொம்ப நல்லா இருக்கும். உப்பு கொஞ்சம் தூக்கலா போடுங்க.
எல்லாம் சில காலம்.....
ரேவ்'ஸ்
நன்றி ரேவ்'ஸ்
எல்லாம் சில காலம்.....
thank u friend
thank u friend
sambar variety pathi solunga
sambar variety pathi solunga tholi
hi sindhu
நன்றி சிந்து. நீங்க ஏன் நன்றி சொல்றீங்க? சாம்பார் அடுத்த குறிப்பில் அனுப்புகிறேன்.
எல்லாம் சில காலம்.....
பாலநாயகி & சிந்து
மீன் வறுவல்... சுலபமான குறிப்பு. சமைத்துப் பார்க்கிறேன் பாலநாயகி.
http://www.arusuvai.com/tamil/recipes/38 இந்த திரெட்டில் பாருங்க சிந்து. விதம்விதமான சாம்பார் குறிப்புகள் கிடைக்கும்.
புனிதா
நன்றி புனிதா. சிந்து கேட்டாங்கனு நானும் ஈஸியா சாம்பார் செய்து அனுப்பிட்டேன். அது பப்ளிஷ் ஆகிடுச்சி.
எல்லாம் சில காலம்.....