தேதி: March 23, 2015
பழைய ஜீன்ஸ் - ஒன்று
பழைய டீ ஷர்ட் - ஒன்று
லேஸ் சிறிது
வெல்க்ரோ
ஜிப்
ஊசி
நூல்
ஜீன்ஸ் பேண்ட்டின் கால் பகுதியில் 35 செ.மீ நீளமும், 30 செ.மீ அகலமும் வருமாறு அளந்து 2 துண்டுகள் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

அதே அளவில் பேக்கின் உள் துணிக்காக டீ ஷர்ட்டில் 2 துண்டுகள் வெட்டி எடுக்கவும்.

கைப்பிடிக்கு 65 செ.மீ நீளமும், 6 செ.மீ அகலமும் இருக்குமாறு 4 துண்டுகள் வெட்டி எடுக்கவும்.

அவற்றில் இரண்டு துண்டுகளை எடுத்து, இணைத்து தைத்துவிட்டு திருப்பிக் கொள்ளவும். (நல்ல பக்கம் வெளியே இருக்கும்படி திருப்பிக் கொள்ளவும்). இதே போல் மீதமிருக்கும் இரண்டு துண்டுகளையும் தைத்து திருப்பிக் கொள்ளவும்.

பேக்கின் உள் துணிக்காக வெட்டி எடுத்த டீ ஷர்ட் துண்டுகள் இரண்டையும் சேர்த்து, 'ப' வடிவில் மூன்று பக்கங்களையும் இணைத்து தைத்துவிட்டு, முடிவில் ஒரு விரல் நீளத்திற்கு (திருப்புவதற்காக) தைக்காமல் இடைவெளி விட்டு வைக்கவும். தைத்த பிறகு பை போல இருக்கும்.

ஜீன்ஸ் பேண்ட் துண்டுகளில் ஏதேனும் ஒரு துண்டின் நடுவில் பாக்கெட்டை வைத்து தைத்துக் கொள்ளவும்.

பிறகு டீ ஷர்ட் துணிகளை தைத்தது போலவே ஜீன்ஸ் துணிகளையும் (நல்ல பக்கம் உள்ளே இருக்கும்படி) 'ப' வடிவில் மூன்று பக்கங்களையும் இணைத்து தைத்துவிட்டு, முடிவில் ஒரு விரல் நீளத்திற்கு (திருப்புவதற்காக) தைக்காமல் இடைவெளி விட்டு வைக்கவும்.

ஜீன்ஸ் துணியை 3 பக்கமும் இணைத்து தைத்த பின் கீழ் மூலையை 5 செமீ அளவிற்கு இருபுறமும் தைக்கவும்.

தைத்த டீ ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பைகள் இரண்டையும் நல்ல பக்கம் உள்ளே வருமாறு வைத்துக் கொண்டு, படத்தில் காட்டியபடி கைப்பிடியை வைத்துத் தைக்கவும். தைக்கும் போது கைப்பிடி சமமான அளவு இடைவெளியில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். இதே போல் மற்றொரு கைப்பிடியை மறுபக்கத்தில் வைத்துத் தைக்கவும்.

திருப்புவதற்காக விட்டு வைத்த ஒரு விரல் அளவு இடைவெளி வழியாக நல்ல பக்கம் வெளியே வருமாறு திருப்பிக் கொள்ளவும். திருப்பிய பிறகு அந்த இடைவெளியை ஊசி நூலால் இணைத்து தைத்துவிடவும்.

பேக்கின் அளவிற்கேற்ப ஜிப் வைத்து தைக்கவும். வெல்க்ரோவும் வைக்கலாம்.

ஓரத்தில் விரும்பிய லேஸ் வைத்து கைத்தையல் போடவும். அழகிய ஷாப்பிங் பேக் ரெடி.

Comments
முசி
நல்ல நல்ல ஐடியாவாக குடுக்கறீங்க!! வாழ்த்துக்கள்.....பேக் ஐடியா சூப்பர்....
ஒரு சின்ன ஐடியா.....உங்களோட கால்மிதியடிக்காக ஒரு பின்னல் செய்திருந்தீங்களே அதுபோலவே இந்த துணியில் பின்னல் செய்து கைப்பிடியாக இணைத்திருந்தீர்கள் என்றால், பேக் இன்னும் கலக்கலாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்....ஏதோ மனதில் தோன்றியதை சொல்லிவிட்டேன்......தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
பை
சூப்பர் ஐடியா முஸி. பாராட்டுக்கள்.
- இமா க்றிஸ்
நன்றி
குறிப்பினை வெளியிட்ட அட்மின் மற்றும் டீமிர்க்கு மிக்க நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
அனு செந்தில்
இதுவும் நல்ல ஐடியா தான்.தவறாக நினைக்க ஒன்றும் இல்லை.வெறு ஒன்று செய்யும் போது இதுமாதிரி செய்து பார்க்கிறேன்.நன்றி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
இமாம்மா
பாராட்டிர்க்கு மிக்க நன்றி.இமாம்மா.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
முசி
பை அழகா இருக்கு முசி.;)
நல்ல உபயோகமான ஒன்று.
நிகிலா
மிக்க நன்றி,நிகிலா.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
musi
Nalla idea... i like it. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
மிக்க நன்றி வனி.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.