செஷ்வான் சிக்கன் கிரேவி

தேதி: March 26, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

எலும்பில்லாத கோழி துண்டுகள் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
குடைமிளகாய் - ஒன்று
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - ஒன்று
செஷ்வான் சாஸ் - 4 தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மைதா - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை


 

இஞ்சி மற்றும் பூண்டை மிகவும் பொடியாக நறுக்கவும். வெங்காயம், குடைமிளகாயை விரும்பிய வடிவில் நறுக்கிக் கொள்ளவும். சிக்கனை மெல்லிய துண்டுகளாக வெட்டி அதனுடன் சோயா சாஸ், கால் தேக்கரண்டி நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் மைதா சேர்த்து பிரட்டி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
சிக்கன் ஊறியதும் சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து எண்ணெய் வடிய விடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி மீதமிருக்கும் நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கியவற்றுடன் செஷ்வான் சாஸ் சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் பொரித்த சிக்கன் துண்டுகளை அதில் சேர்த்து கலக்கவும்.
கடைசியாக சோள மாவுடன் சிறிது தண்ணீர் கலந்து ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான செஷ்வான் சிக்கன் கிரேவி தயார். கொத்தமல்லி தூவி பரிமாறவும். இது ஒரு இந்தோ சைனீஸ் ஃபியூஷன் டிஷ்

<a href="/tamil/node/31164"> செஷ்வான் சாஸ் செய்முறை </a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனக்கு செஷ்வான் டிஷ் ரொம்ப பிடிக்கும். நீங்க‌ நல்லா செய்து இருக்கீங்க‌. சிம்பிளாவும் இருக்கு. கண்டிப்பா ட்ரை பண்றேன்.

எல்லாம் சில‌ காலம்.....

வாணி செம்ம சூப்பர்ங்க ஈசியா சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.