ஆகாவா அல்வா

தேதி: March 26, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

திருமதி. இளவரசி அவர்களின் குறிப்பினை பார்த்து செய்தது.

 

தோல் சீவி பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் - ஒரு கப்
காரட் துருவல் - ஒரு கப்
வாழைப்பழத்துண்டுகள் - ஒரு கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
பால் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
நெய் - கால் கப்
ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 10


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆப்பிள், கேரட் மற்றும் வாழைப்பழத்தை சிறிது பால் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் அரைத்த விழுது, தேங்காய் துருவல் மற்றும் பால் சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி கொண்டே இருக்கவும்.
கலவை சிறிது கெட்டியானதும் சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளறவும்.
சர்க்கரை கரைந்ததும் இடையிடையே நெய் சேர்த்து கிளறவும்.
முந்திரியை சிறிது நெய்யில் வறுத்து வைக்கவும்.
கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் போது வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
சுவையான ஆப்பிள் காரட் வாழைப்பழ அல்வா தயார்.

சீக்கிரம் செய்து விட வேண்டுமென்று தீயை கூட்டாமல், மிதமான தீயிலேயே செய்யவும்.

பழங்களை அரைக்காமல் பொடியாக நறுக்கி அப்படியே வேக விடலாம். எப்படி செய்தாலும் சுவையாக இருக்கும் ஒரு வாரம் வைத்து சாப்பிட விரும்பினால், தேங்காயை தவிர்க்கவும்.

புளிப்பில்லாத ஆப்பிளாக இருந்தால் சுவை தூக்கலாக இருக்கும். பழங்களின் இனிப்புக்கு ஏற்றபடி சர்க்கரை அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Ahha. Vanthuducha halwa. Super yummy

Be simple be sample

வனி ஆஹாவா இருக்கு, கலர்ஃபுல், கிலி, கிலி..., வாழ்த்து சொல்லும் அளவுக்கு சமையல் அனுபவம் குறைவு என்பதால் வண்க்கம், ஹஹாஅ

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

Halwa super.yummmy...

அல்வா சூப்பர். நாக்க‌ உச்சி கொட்ட‌ வைக்குது. பேர‌ பாத்துட்டு ஆகாவானு ஒரு பழம் இருக்கு அப்டி என்ன‌ பழம்னு பாக்கலாம்னு வந்தா 3 ஐட்டத்தோட‌ முதல் எழுத்து. ஆனாலும் அல்வா சூப்பர். ம்ம்ம்ம்ம்ம்ஹாஆ.

எல்லாம் சில‌ காலம்.....

பேரு வித்யாசமா இருந்தாலும் அல்வா அருமை அப்படியே சாப்பிட தோனுது :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Super recipe ku mikka nanri elu :) ellaa frnds kum nanri.. avasiyam try pannunga, nallaa irundhadhu.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா