ஹலோ தோழிகளே
என் மகனுக்கு 1 1/4 வயது. நான் அவனுக்கு 6 மாதம் முடிந்தவுடன் வேலைக்கு வந்து விட்டேன். மாமனார் குழந்தையை பார்த்துகொள்கிறார். என் கணவருக்கு வருமானம் குறைவு. வேலையும் நிரந்தரம் அல்ல. வீட்டு செலவு போக என் வருமானத்தில் இருந்து சிறிது சேமிப்பு உள்ளது. மாமனாருக்கும் கொஞ்சம் பணம் கொடுக்கிறோம். 2 பேர் வருமானம் இருப்பதால் கடன் இல்லாமல் வாழ்க்கை போகிறது. என் பயனுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனால் நான் விடுமுறை எடுத்து அவனை பார்த்து கொள்வேன். அப்படி நான் விடுமுறை எடுக்கும்போதும், பண்டிகை காலங்களில் வரும் தொடர் விடுமுறை காரணமாக நான் வீட்டில் இருந்த பிறகு திரும்ப வேலைக்கு செல்ல கிளம்பும்போது என் கணவர் வீட்டில் குழந்தயை பார்த்துகொள் வேலைக்கு செல்ல வேண்டாம். என்று பிரச்சனை செய்கிறார். நானும் எவ்வளவோ எடுத்து சொல்லி பார்த்தேன். ஒருத்தருடைய வருமானம் வைத்து குடும்பம் நடத்துவது கடினம் என்று. என் கணவர் புரிந்துகொள்ள மாட்டேன்கிறார். கஞ்சி ஊற்றியாவது காப்பாற்றுகிறேன் என்கிறார். குழந்தையின் படிப்பிற்கு வண்டியை விற்று விடலாம். கடன் வாங்கலாம் என்று கூறுகிறார். என் மாமனார் இந்த மாதிரி இருந்து தான் கடன் தொல்லையால் விஷம் குடித்து பிழைத்திருக்கிறார். நான் இப்பொழுது வேலை பார்க்கும் இடத்தில் நல்ல சம்பளம் கிடைக்கிறது. நாங்கள் ஊட்டியில் இருக்கிறோம் இங்கு பெரிய நிறுவனம் ஏதும் இல்லை. சிறிய கடைகள் மட்டும் தான் சம்பளமும் கம்மி நான் இந்த வேலையை விட்டால் பிற்காலத்தில் நல்ல வேலை நல்ல சம்பளம் கிடைப்பது கடினம். இது என் கணவருக்கு நன்றாக தெரியும். தெரிந்தும் அவர் அப்படி சொல்வது தான் எனக்கு வேதனையாக உள்ளது. என் கணவருக்கு இதை எப்படி புரிய வைப்பது. நீங்கள் தான் எனக்கு வழி கூற வேண்டும்
one month suma leave potu
one month suma leave potu veetla irundhu parunga. ela expense fula avara paka solunga. apa purium unga husbanduku.
சிந்து
நான் டெலிவெரிக்கு பிறகு வேலைக்கு சேர்ந்து 10 மாதங்கள் தான் ஆகுது பா திரும்ப 1 மாதம் லீவ் கொடுக்க மாட்டாங்க இல்ல னா இத நான் எப்பொழுதோ செய்திருப்பேன்
please advice me friends
please advice me friends
எதார்த்தத்தை உங்கள் கணவர்
எதார்த்தத்தை உங்கள் கணவர் தான் புறிந்துகொள்ளவேண்டும். மேலே ஒரு தோழி சொன்ன முறை நன்றாக இருந்தது ஆனால் அதை செயல்படுத்தமுடியாதே... சொல்லி சொல்லி புறியவையுங்கள். அவருக்கு மிகவும் வேண்டியவர்களிடம் சொல்லி புறியவைக்கலாம்.
அன்புடன்
கண்ணன்
துபாய்
உங்கள் கணவாிடம் ஒரு மாதம் என்
உங்கள் கணவாிடம் ஒரு மாதம் என் சம்பளத்தை எடுக்காமல் சமாளிக்க முடிந்தால் வேலையை விடுவதாக கூறுங்கள்
think positive
neegna kadavul kita nala
neegna kadavul kita nala prayer panunga. kandipa unga husband ungala puridhukolvar. then future pathi avarurku puriya vaiyunga friend. please unga joba matum vidadhinga. then romba feel panuvinga. mudindha alavuku poradunga. oru samayam avungaley adha purinjupanga. ok