சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறேன். . ..

மனசு ரொம்ப சந்தோஷமாக இருக்கு..எல்லாரிடமும் share பண்ணிக்கலாம்ன்னு வந்தேன்.எங்க அத்தைக்கும் அவுங்க தம்பிக்கும் சண்டை வந்து ரெண்டு வருடமாக பேசுவதில்லை.ஒருவர் முகத்தில் இன்னொருவர் பார்த்துப்பதில்லை.அப்படிதான் இருந்தாங்க.நேற்று என் பையனுக்கு பிறந்தநாள் அதில் எல்லோரும் சேர்ந்து கொண்டாடனும்னு ஆசைப்பட்டேன்.நேற்று எல்லாரையும் சேர்த்துட்டேன்.என் கணவர் சென்னை யில் இருக்கிறார்.நான் செய்தது ரெண்டு பேரும் பேசிகிட்டாங்க.வீட்டுக்கு வந்து பிறந்தநாள் கொண்டாடினாங்க.விவரமாக எழுத முடியவில்லை. .....என் பையனுக்கு 3வயது முடிந்தது. முதல் ரெண்டு பிறந்தநாள் க்கு சேர்ந்ததில்லை.இரண்டு குடும்பத்தை சேர்த்து வைத்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறேன். .....என்னால் நடந்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன்...

தோழி,

உங்களுடைய‌ மகிழ்ச்சி மேலும் பெருகட்டும்.நல்வாழ்த்துக்கள்.

No pains,No gains

ANANTHAGOWRI.G

மிக்க நன்றி ப்பா..உங்க பதிவுக்கு.பதிலே வரலைன்னு பார்த்தேன். .

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்