கர்ப‌ காலத்தில் சளித்தொல்லை ‍உதவி ப்ளீஸ்

நான் 5 மாதம் கர்பமாக‌ உள்ளேன். முதல் குழந்தையின் போதும் சரி, இப்பவும் சரி இந்த‌ சளித்தொல்லை என்னை வாட்டி எடுக்குது.

ஒரு முறை சளி பிடிச்சால் இருமலும் உடனே ஆரம்பிச்சிடுது. என்ன‌ மாத்திரை மருந்து எடுத்து மாதக்கணக்கில் இந்த‌ இருமல் விடவே மாட்டேங்குது. பகலை விட‌ இரவில் தூங்க‌ முடியாதபடி படுத்துது.

சில‌ பேர் சித்தரத்தை, அதிமதுரம் வாயில் அடக்கிக்கொண்டால் இருமல் கட்டுபடும்னு சொல்றாங்க‌, அதுவே சில‌ பேர் இது காரம் அதிகம், சூடு அதிகம் அதனால‌ கர்பகாலத்தில் தவிர்க்கனும்னு சொல்றாங்க‌. எனக்கு என்ன‌ பன்றதுனே புரியலை.

மிளகு, தனியா எனக்கு அலர்ஜி, அது தவிர‌ வேற‌ எதாவது நல்ல‌ கை வைத்தியம் இருந்தால் சொல்லுங்க‌ ப்ளீஸ்...

எனக்கும் அதே பிரச்சனைதான் பட் நான் கன்சீவா இல்லை. என்ன‌ மருந்து எடுத்தாலும் விட‌ மாட்டுக்கு. டாக்டர் காட்டியும் விட‌ மாட்டுக்கு

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Nanum consive ah iruken enaku ethu 38 weeks dry cough mudiyala syrup kudichalum nikala ena panalam sollunga pls dry nan arusuvaiku puthusu adan Tamil LA type pana theriyala

பிரேமா, கனகா எப்படி இருக்கீங்க? உங்களிடம் பேசியிருக்கேன்.

சளித்தொல்லைக்கு சுடச்சுட சாப்பிடுங்கள். தூதுவளை ரொட்டி சுட்டு சாப்பிடுங்கள்.சரியாயிடும்ப்பா...

அன்பு தோழி. தேவி

ஆமாம் பேசி இருக்கோம். குழந்தைகள் நல்லாயிருக்காங்களா. குட்டி பாப்பா எப்படி இருக்கு

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

தோழி இந்த‌ நேரத்தில் கண்ட‌ மருந்தும் வேண்டாம் நல்ல‌ சுடுதண்ணீர் குடிங்க‌ சரியாகிடும்

நல்லாயிருக்காங்க சிஸ்டர்.குட்டியும் சேட்டை பண்றான்..

அன்பு தோழி. தேவி

உங்களுக்கு குட்டி பையன‌ வைச்சு நல்ல‌ பொழுது போகும்..சின்ன‌ பசங்க‌ வீட்டுல‌ இருந்தாலே அது ரெம்ப‌ சந்தோசமாக‌ இருக்கும்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

பனங்கற்கண்டு, மஞ்சள் தூள் சேர்த்து பாலில் காய்ச்சி குடிங்க.
துளசி சாறு, வெற்றிலை கிடைச்சா சாப்பிடுங்க. தண்ணில சீரகம், பனங்கற்கண்டு போட்டு காய்ச்சி நல்லா குடிங்க.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

உங்களுக்கு எத்தனை பசங்க? ஆமாம் ப்பா நேரம் போறது தெரியல.மாமியார் வீட்டில் இருக்கேன்

அன்பு தோழி. தேவி

ஹாய்

ஆமா பா பேசியிருக்கோம்... ரெண்டு குட்டேஸும் எப்படி இருக்காங்க‌... உங்க‌ ஹெல்த் எப்படி இருக்கு... ஃ

ப்ரெஷ் தூதுவளை இங்கே கிடைக்காது... தூதுவளை பொடி வேணும்னா இங்கே கிடைக்கும், அதை வச்சு எதும் பன்ன‌ முடியுமா????

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்