சுண்ட‌ வெச்ச‌ மீன் குழம்பு

தேதி: March 28, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.5 (2 votes)

 

நெத்திலி, கவலை, நாக்கு, வாழை போன்ற‌ ஏதேனும் ஒரு பொடி மீன் - கால் கிலோ
தேங்காய் - கால் மூடி
தக்காளி - 3
பூண்டு - 10
காய்ந்த‌ மிளகாய் - 5
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப‌
வடகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

மீனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய், தக்காளி, பூண்டு, காய்ந்த‌ மிளகாய், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து மையாக‌ அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வடகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் அரைத்த‌ தேங்காய் தக்காளி விழுதை சேர்க்கவும்.
பின்னர் மீனை சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் வைத்து வேக‌ விடவும்.
5 முதல் 10 நிமிடங்கள் வேக‌ வைத்தால் சுவையான‌ சுண்ட‌ வச்ச‌ மீன் குழம்பு தயார். இதை சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். எல்லா வகை சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். சப்பாத்திக்கு ஏற்ற சைடு டிஷ் இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Vithyasama simple a iruku, nethili kidaikum pothu tri panaraen

Be simple be sample

ஈசியான குழம்பு சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ அட்மினுக்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி ரேவ்'ஸ். கண்டிப்பா செய்து பாருங்க‌. ரொம்ப‌ நல்லா இருக்கும். நெத்திலி மட்டும் இல்ல‌. கவலை, வாழை, நாக்கு போன்ற‌ மீனிலும் செய்யலாம். காறை மீனில் இந்த‌ குழம்பு ரொம்ப‌ நல்லா இருக்கும். ட்ரை பண்ணுங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி ஸ்வர்ணா

எல்லாம் சில‌ காலம்.....

மிகவும் சுவையான‌ குறிப்பு... ஆனால் வடகம் என்றால் என்ன‌? இலங்கையில் வடகம் என்றால் வேப்பம்பூவில் செய்து சாதத்துடன் உண்ணுவேம் ஆனால் இங்கே வதக்கும் போது வடகம் சேர்க்கச் சொல்லியிருக்கின்றீர்கள்??

ஷாலி அருண்

நன்றி ஷாலி. வடகம்னா கடுகு உளுந்து சீரகம் வெங்காயம் கறிவேப்பிலை பெருஞ்சீரகம் வெந்தயம் பூண்டு மஞ்சள் தூள் எல்லாம் ஒன்றாக‌ சேர்த்து வெயிலில் நன்கு உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ள‌ வேண்டும். இது வருட கணக்கில் கெடாது. நன்றாக‌ இருக்கும். இது தமிழ்நாட்டில் கிடைக்கும். இது மே மாதங்களில் (வெயில் காலத்தில்) வருடத்திற்கு தேவையானதை செய்து கொள்வார்கள்.

எல்லாம் சில‌ காலம்.....