மசாலா சிக்கன்

தேதி: March 28, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 4
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பிரியாணி இலை - ஒன்று
ஊற வைக்க :
தயிர் - அரை கப்
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
உப்பு


 

வெங்காயம், பச்சைமிளகாயை அரைத்துக் கொள்ளவும். சிக்கனில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, வெங்காய கலவை மற்றும் உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம், பிரியாணி இலை போட்டு பொரித்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தூள் வகைகளை சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் ஊற வைத்த சிக்கனை சேர்த்து வதக்கவும். தேவையெனில் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
சிக்கன் கலவையில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேக விடவும்.
சிக்கன் வெந்ததும், இறக்கும் முன் மிளகுத் தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
சுவையான மசாலா சிக்கன் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரேவ்ஸ் கலக்குறீங்க போங்க மசாலா சிக்கன் அப்படியே எனக்குதான் :) போட்டோஸ் அட்டகாசமா இருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பர் பாத்தாலே சாப்பிடனும் போல‌ தோணுது

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

சிம்பிளா சூப்பரா இருக்கு. சூப்பர் சைடு டிஷ். தக்காளி சேர்க்க‌ வேண்டாமா? அட்டகாசமா இருக்கு.

எல்லாம் சில‌ காலம்.....

Thanks admin&arusuvai team

Be simple be sample

Swa thanku.

Kanagamuthu sapidanumna eduthukonga. Thanku.

Bala tomato podamaey nallarukum seithu paruga. Thanku

Be simple be sample

:o !!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Y vani :o ipadi reaction;)))

Be simple be sample