மஷ்ரூம் பார்லி சூப்

தேதி: March 30, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4.5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மனோகரி அவர்களின் மஷ்ரூம் பார்லி சூப் என்கின்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மனோகரி அவர்களுக்கு நன்றிகள்.

 

காளான் - 100 கிராம்
பார்லி - 50 கிராம்
பட்டர் / எண்ணெய் - தேவையான அளவு
பூண்டு - 4 பல்
தக்காளி - ஒன்று
ரசப்பொடி - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு
சத்து மாவு - 2 தேக்கரண்டி
ஃப்ரஷ் ஒரிகனோ - சிறிது
கொத்தமல்லித் தழை - சிறிது


 

வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி மற்றும் காளானை சிறுத் துண்டுகளாக நறுக்கவும். பார்லியை வேக வைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பட்டர் போட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, ஒரிகனோ, தக்காளி மற்றும் காளான் சேர்த்து வதக்கி விடவும்.
வெங்காயம் காளான் கலவையில் தேவையான அளவு தண்ணீர், உப்பு, ரசப்பொடி, வேக வைத்த பார்லி சேர்த்து கொதிக்க விடவும். கொதித்து வரும் பொழுது கால் டம்ளர் நீரில் சத்து மாவை கரைத்து ஊற்றி ரசப்பொடி தூசி இறக்கவும்.
கொத்தமல்லித் தழை சேர்த்து சூடாக பரிமாறவும்.

<a href="/tamil/node/23352"> ரசப்பொடி செய்முறை </a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்