தேங்காய் மசாலா

தேதி: March 31, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

தேங்காய் - ஒன்று
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - ஒன்று
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
புளி - ஒரு கோலி அளவு
பூண்டு - 5 பல்
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சீரகம் மற்றும் பூண்டை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை அரைத்து கெட்டிப்பால், தண்ணீர் பால் என்று இரண்டு வகையாக தனியே எடுத்து வைக்கவும்.
தண்ணீர் பால், புளிக்கரைசல், வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி, அரிசி மாவு, பூண்டு விழுது ஆகியவற்றை உப்புச் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
மிதமான தீயில் வைத்துப் பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு, கெட்டியான தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
சுவையான தேங்காய் மசாலா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Romba nallaa irukkunga. Idli dosaiku ethana variety kathukitaalum paththaadhu. Will try this :) vaazthukkal.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா