தேதி: March 31, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மஹாலெட்சுமி அவர்களின் பின்னல் சமோசா குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மஹாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.
மைதா - கால் கிலோ
எண்ணெய் - அரை லிட்டர்
உருளைக்கிழங்கு - கால் கிலோ
பச்சைபட்டாணி - 100 கிராம்
காரட் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 3
காரப்பொடி - அரைத் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - கால் கட்டு
தக்காளி - ஒன்று
மைதா மாவில் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

உருளைக்கிழங்கு, காரட், பச்சைபட்டாணி ஆகியவற்றை வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி, வேக வைத்த காய்கறிகள் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, கால் தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கி நறுக்கிய பச்சை கொத்தமல்லி தூவி இறக்கி ஆற வைக்கவும்.

மைதாவை சிறிய அப்பளமாக போட்டு பூரணத்தை நடுவில் நீளவாக்கில் வைத்து இரண்டு ஒரங்களையும் கத்தியால் கீறி விடவும்.

கீறிய ஒவ்வொரு சிறுத் துண்டாக எடுத்து பூரணத்தின் மேல் ஒன்றன் மேல் ஒன்றாக போட்டு நன்றாக அழுத்தி விடவும்.

பின்னல் மாதிரி அழகாக வரும். எல்லாவற்றையும் இதே மாதிரி செய்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான பின்னல் சமோசா தயார்.

Comments
hi kitchen queen
Ur receipes are superbbb and colourful.athulayum pinnal samosa alaga iruku...