முள்ளங்கி சட்னி

தேதி: March 31, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முள்ளங்கி - ஒரு கிலோ
வெங்காயம் - ஒன்று (பெரியது)
பச்சை மிளகாய் - 3
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - 5 இலைகள்
கடுகு - தாளிக்க
எண்ணெய் – சிறிது


 

முள்ளங்கியை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் பொடியாக நறுக்கவும்.
முள்ளங்கி, தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
காய்கள் வெந்ததும் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வதக்கியவற்றுடன் அரைத்து வைத்துள்ள கலவையை கொட்டிக் கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும்.
சுவையான முள்ளங்கி சட்னி ரெடி. இதனை இட்லி, தோசை, சப்பாதியுடன் பரிமாறலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்