எள்ளு ப்ரான் ஃப்ரை

தேதி: April 1, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட வனிதா அவர்களின் எள்ளு ப்ரான் ஃபிரை என்கின்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வனிதா அவர்களுக்கு நன்றிகள்.

 

இறால் - அரை கிலோ
முதல் கலவை:
இஞ்சி விழுது - ஒரு மேசைக்கரண்டி
பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
வெள்ளை (அ) கறுப்பு மிளகு தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இரண்டாவது கலவை:
கெட்டி தயிர் - அரை கப்
க்ரீம் - 3 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
கடலை மாவு - 1 1/2 மேசைக்கரண்டி
மேல் மாவு:
ப்ரெட் க்ரம்ப்ஸ் - ஒரு கப்
வெள்ளை (அ) கறுப்பு எள்ளு - அரை கப்


 

இறாலை சுத்தம் செய்து வைக்கவும். மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்து வைக்கவும்.
எலுமிச்சை சாறில் இஞ்சி விழுது, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், வெள்ளை (அ) கறுப்பு மிளகு தூள், உப்பு ஆகியவற்றை கலந்து அதில் சுத்தம் செய்த இறாலை போட்டு பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய இறாலை எடுத்து நீர் இல்லாமல் வடித்து இரண்டாம் கலவையான கெட்டி தயிர், க்ரீம், ஏலக்காய் தூள், கடலை மாவு கலவையில் போட்டு 40 நிமிடம் ஊற வைக்கவும். ப்ரெட் க்ரம்ப்ஸ், எள்ளு இரண்டையும் ஒரு தட்டில் கலந்து அதில் ஊற வைத்த இறாலை பிரட்டி ஃப்ரிட்ஜில் 15 நிமிடம் வைக்கவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய இறாலை போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான‌ எள்ளு ப்ரான் ஃப்ரை தயார்.

தயிரை சிறிது நேரம் துணியில் கட்டி தொங்க விட்டு நீர் இல்லாமல் உபயோகிக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Kq bala vazthukkal. Kalakkal kurippugal

Be simple be sample

En kurippai thervu seydhu azagaaga seydhu padangal inaithamaikku nanri bala :) romba magizchoyaa irukku.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி அருசுவை டீம்.

எல்லாம் சில‌ காலம்.....

தேங்க்ஸ் ரேவ்'ஸ். இது வனி அக்காவோட‌ குறிப்பு.

எல்லாம் சில‌ காலம்.....

அக்கா அழகான‌ குறிப்பை சொன்ன‌ உங்களுக்கு தான் நன்றி சொல்லனும். டேஸ்ட் ரொம்ப‌ நல்லா இருந்துச்சி. அந்த‌ எலுமிச்சை புளிப்பு ப்ரானில் ஊறி செம‌ டேஸ்ட் அக்கா. இப்படி ஒரு அழகான‌ குறிப்பு கொடுத்ததற்கு மிக்க‌ நன்றி.

எல்லாம் சில‌ காலம்.....