அகத்திக் கீரை கூட்டு

தேதி: April 1, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

திருமதி. சாந்தா வெங்கட்ராமன் அவர்கள் வழங்கியுள்ள அகத்திக் கீரை கூட்டு என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சாந்தா அவர்களுக்கு நன்றிகள்.

 

அகத்திக்கீரை - ஒரு கட்டு
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு - 5 பல்
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி
பயத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
உப்பு - அரை தேக்கரண்டி


 

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பூண்டு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் கீரை மற்றும் பயத்தம் பருப்பை கழுவி சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக‌ வைக்கவும்.
கீரை நன்கு வெந்ததும் தேங்காய்த் துருவலைப் போட்டு வதக்கி இறக்கவும்.
அகத்திக் கீரை கூட்டு தயார்.

வெந்த‌ முருங்கை கீரையும் வேகாத‌ அகத்தி கீரையும் பாழ் என்பது பழமொழி, எனவே முருங்கையை பாதி வேக‌ வைக்கனும். அகத்தி கீரையை முழுதாக‌ வேக‌ வைக்க‌ வேண்டும்.

எந்த‌ கசப்பு பொருளுடனும் தக்காளி மற்றும் மிக‌ சிறிது மிளகாய்த் தூள் சேர்த்து வேக‌ வைத்தால் கசப்பு தன்மைக் தெரியாது.

அகத்தி கீரை மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடுவது நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ அருசுவை டீமிற்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....