தேதி: April 1, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
புழுங்கல் அரிசி - 2 1/2 கப்
அச்சு வெல்லம் - அரை கிலோ
தேங்காய் - ஒன்று
ஏலக்காய் - 5
உப்பு - ஒரு தேக்கரண்டி
புழுங்கல் அரிசியில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் அரிசியை தண்ணீர் வடித்து உப்பு போட்டு தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைத்து எடுக்கவும்.

அடுப்பில் அகன்ற பாத்திரத்தை வைத்து அதில் பாதி அளவு தண்ணீர் வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும். அரைத்த மாவை முறுக்கு பிழியும் குழாயில் உருண்டை அச்சு (ஒரு ஓட்டை உள்ள அச்சு) போட்டு கொதிக்கும் தண்ணீரில் மாவை பிழியவும்.

தண்ணீரில் மாவு வெந்து கொழுக்கட்டைகளாக தண்ணீரின் மேல் மிதக்கும். அப்பொழுது அதை சாரணியால் தண்ணீர் இன்றி அரித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். மாவு அனைத்தையும் இது போல் பிழிந்து கொழுக்கட்டைகளாக எடுத்து கொள்ளவும்.

பாத்திரத்தில் மீதமுள்ள தண்ணீரில் வெல்லத்தை போட்டு பாகு காய்ச்சவும். அதனுடன் வேக வைத்துள்ள கொழுக்கட்டைகளை சேர்க்கவும்.

அதில் தேங்காய்ப்பூ துருவல், ஏலக்காய் தூவி நன்கு கிளறி இறக்கவும்.

சுவையான நீர் பாகு கொழுக்கட்டை தயார்.

Comments
நன்றி அட்மின்
குறிப்பை அழகாக வெளியிட்ட அருசுவை டீமிற்கு நன்றிகள் பல.
எல்லாம் சில காலம்.....
பாலா
இந்த கொழுக்கட்டை செய்து பேன்ஸ் கிளப்பில் போட்டுருக்கேன்.ரொம்ப தேங்க்ஸ் பாலா ஈசியாக இருந்தது....
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி