தேதி: April 2, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பச்சை பட்டாணி - கால் கிலோ
மைதா மாவு - கால் கிலோ
காலிஃப்ளவர் - ஒன்று
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
தேங்காய் - 3 கீற்று (விழுதாக அரைக்கவும்)
மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
லவங்கப் பட்டை - சிறியத் துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
நெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மைதா மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். மாவு மிருதுவாக இருக்குமாறு நன்கு பிசைய வேண்டும்.

பிசைந்த மாவினை மெல்லிய சப்பாத்திகளாய் தேய்த்து ஒரு பிஸ்கட் கட்டர் கொண்டு சிறிய பிஸ்கட் அளவு பூரிகளாக வெட்டிக் கொள்ளவும்.

இந்த சிறிய பூரிகளை சுமார் இரண்டு மணிநேரம் வெயிலில் உலர்த்தவும்.

பின்னர் எடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்.

பட்டாணியை குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கிராம்பு மற்றும் ஏலப்பொடி போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கி சிவந்ததும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்துப் பிரட்டவும்.

சுத்தம் செய்து நறுக்கிய காலிஃப்ளவர் துண்டுகள், ஊற வைத்து எடுத்த பட்டாணி ஆகியவற்றை போட்டு சிறிது தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும்.

காய்கள் நன்கு வெந்ததும் மசித்த தக்காளியையும் அரைத்து வைத்துள்ள தேங்காயையும் சேர்த்து மேலும் சிறிது நேரம் வேக விடவும். குருமா மிகவும் கெட்டியாகிவிடாமல், தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

அதன் பின்னர் பொரித்து வைத்துள்ள மினி பூரிகளை குருமாவில் போட்டு மேலும் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு வேக விடவும்.

நன்கு வெந்ததும் இறக்கி எலுமிச்சை சாறு பிழிந்து, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

Comments
ஹேமா
Congrats Hema. Enaku pidicha poori athula kuruma super.
Be simple be sample
எனக்கு ரொம்ப புடிக்கும்
enaku indha dish romba pudichiruku. thanks.பூரி கிழங்கு செய்வது சொல்லுங்கள்
hema
Vidhiyasamana combination kurma. Vaazthukkal :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா