நிலக்கடலை குலோப்ஜாமூன்

தேதி: April 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

திருமதி. மஹாலெட்சுமி அவர்கள் வழங்கியுள்ள நிலக்கடலை குலோப்ஜாமூன் என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மஹாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

நிலக்கடலை - 150 கிராம்
முந்திரி பருப்பு - 150 கிராம்
கெட்டிபால் - 250 மி.லி
மைதா - 100 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
பேக்கிங் பவுடர் - சிட்டிகை
ஏலக்காய் - 3
கேசரி பவுடர் - சிட்டிகை
எண்ணெய் - 250 மி.லி


 

நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும். நிலக்கடலை, முந்திரிப்பருப்பு இரண்டையும் பாலில் ஊற விடவும்.
முந்திரி மற்றும் கடலை நன்கு ஊறியதும் விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் மைதா, பேக்கிங் சோடா, ஏலப்பொடி, கேசரி பவுடர் ஆகியவற்றை சேர்த்து உருட்டும் பதத்திற்கு பிசையவும்.
மாவை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்க்ரையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஏலக்காயை தட்டி போட்டு பாகு காய்ச்சவும்.
பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் எடுத்து பரிமாறவும். சுவையான நிலக்கடலை ஜாமூன் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் ஹேமா. குலாப்ஜாமூன் பார்க்கவே நல்லா இருக்கும் தெரியுது ஹேமா. ஈவினிங் செய்துட்டு சொல்றேன்