முந்திரிக் குழம்பு

தேதி: April 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மும்தாஜ் பேகம் அவர்களின் முந்திரிக் குழம்பு குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மும்தாஜ் பேகம் அவர்களுக்கு நன்றிகள்.

 

சின்ன வெங்காயம் - ஒரு கப்
பூண்டு - அரை கப்
தக்காளி - 5
மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
புளி - எலுமிச்சை பழ அளவு
கடுகு - அரைத் தேக்கரண்டி
வெந்தயம் - அரைத் தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
சோம்பு - அரைத் தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 1
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
தேங்காய் - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 15
கறிவேப்பிலை - தேவையான அளவு


 

வெங்காயம் மற்றும் பூண்டை இரண்டிரண்டாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்.
தக்காளி குழைந்ததும் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தேங்காய் துருவலுடன் முந்திரியை சேர்த்து நைசாக அரைத்து குழம்பில் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான முந்திரிக் குழம்பு தயார். விரும்பினால் 20 முழு முந்திரியை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்