தேதி: April 2, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. உமா அவர்களின் ரவா பால் கொழுக்கட்டை என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய உமா அவர்களுக்கு நன்றிகள்.
ரவா - 200 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
ஏலக்காய் - 3
முந்திரி - தேவையான அளவு
திராட்சை - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பால் - 500 மி.லி
ரவையில் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு போட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த ரவாவை நீளவாக்கில் உருட்டி போட்டு சிறிது நேரம் உலர வைக்கவும்.

பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் சர்க்கரை, ஏலக்காய் போட்டு கொதிக்க வைக்கவும்.

வாணலியில் நெய் ஊற்றி முந்திரி திராட்சையை பொரித்து எடுக்கவும்.

காய்ச்சிய பாலில் உலர்ந்த ரவா உருண்டையை போட்டு வேக விடவும்.

சிறிது நேரம் கழித்து வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து இறக்கவும்.

சுவையான ரவா பால் கொழுக்கட்டை தயார்.

Comments
hems akka
congrats
rava pal kolukattai super, pakkum pothey sapdanum thonuthu....
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
hema
Nice photos hema...
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹேமா
ரவா பால் கொழுக்கட்டை ரொம்ப நல்லா இருக்கு. செய்முறையும் அழகா செய்து காட்டி இருக்கீங்க. ஈஸியான குறிப்பு.
எல்லாம் சில காலம்.....