நியூசிலாந்து தோழிகள் உதவுங்கள்

என் அண்ணன் diplamo முடித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் சிங்கப்பூரில் பணிபுரிந்துள்ளார்.தற்போது இந்தியாவில் உள்ளார்.அவர் தற்போது மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு கன்சல்டன்சி மூலமாக முயற்சிக்கிறார்.ஒரு கன்சல்டன்சியில் நியூசிலாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறுகின்றனர்.என் அண்ணனின் கல்வித்தகுதிக்கு அங்கு வேலை கிடைக்குமா? அவரின் தகுதிக்கு என்ன சம்பளம் கிடைக்கும்?(தோராயமாக).அண்ணன்,அண்ணி மற்றும் இரு குழந்தைகளுடன் அங்கு குடியேற முடியமா? நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு எல்லா செலவுகளும் சேர்த்து எவ்வளவு செலவாகும்? அங்கு வேலை செய்ய IELTS exam எழுதி தேர்ச்சி பெற வேண்டுமா?

விபரங்கள் எதுவும் கொடுக்காமல் கேள்விகளை வைத்திருக்கிறீர்கள் சகோதரி.

//என் அண்ணன் diplamo முடித்துவிட்டு// என்ன டிப்ளோமா?
//5 ஆண்டுகளுக்கு மேல் சிங்கப்பூரில் பணிபுரிந்துள்ளார்.// என்ன பணி?
//என் அண்ணனின் கல்வித்தகுதிக்கு// என்ன கல்வித் தகுதி?
//அங்கு வேலை கிடைக்குமா?// என்ன வேலையை எதிர்பார்க்கிறார்? (உண்மையில்... கன்சல்டன்சி ஆட்கள் வாங்கிக் கொடுக்கப் போகும் வேலையைக் காட்டித்தான் உங்கள் தமையன் இங்கு வர விண்ணப்பிக்கவே போகிறார் என்று ஊகிக்கிறேன்.)
//அவரின் தகுதிக்கு // திரும்பவும்... என்ன தகுதி?
//என்ன சம்பளம் கிடைக்கும்?// :-)

எப்படிப் பதில் சொல்வது?

//ஒரு கன்சல்டன்சியில் நியூசிலாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறுகின்றனர்.// இந்த விடயத்தில் நான் எப்பொழுதும் யாருக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாகப் பதில் சொல்வது இல்லை சகோதரி. காரணம், எனக்குப் பல விடயங்களில் அனுபவம் இல்லை; பல விடயங்கள் புரிவதில்லை. ஒரு திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறது. "நடக்கும் என்பார் நடக்காது; நடக்காதென்பார் நடந்துவிடும்." நீங்கள் அணுகும் கல்சல்டன்சி நம்பகமானது என்றால் நிச்சயம் அவர்களால் நீங்கள் இங்கு கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் உபயோகமான பதில் சொல்ல இயலும்.

//அண்ணன், அண்ணி மற்றும் இரு குழந்தைகளுடன் அங்கு குடியேற முடியமா?// தற்காலிகமாகவா நிரந்தரமாகவா?

பதின்மூன்றாம் தேதி வரை அனேகம் என்னால் இங்கு வர இயலாது. இங்கு வசிக்கும் வேறு யாராவது ஒருவர் கண்ணில் பட்டால் பதில் சொல்வதற்கு உதவும் என்கிற நோக்கத்தில்தான் கேள்வியெல்லாம் கேட்டுவிட்டுப் போகிறேன்.

//அங்கு வேலை செய்ய IELTS exam எழுதி தேர்ச்சி பெற வேண்டுமா?// சில வேலைகளுக்கு எடுக்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

அண்ணனின் கல்வித்தகுதி DEEE.சிங்கப்பூரில் செய்த பணி Maintenance Technician at semiconductor line(Global foundries manufacturing company).எதிர்பார்க்கும் பணி‍யும் இதுவே.அண்ணனுக்கு பணி கிடைத்தால் அண்ணன் பணிபுரியும் காலம் வரை அண்ணி மற்றும் குழந்தைகள் அங்கு வசிக்க எண்ணுகிறார்கள்.கன்சல்டன்சியின் கூற்றில் அண்ணனுக்கு திருப்தி ஏற்படவில்லை.எனவே அவர் குழப்பத்திலிருக்கிறார்.அங்கு வசிக்கும் தங்கள் போன்றோரிடமிருந்து பெறும் விபரங்கள் மூலம் கன்சல்டன்சியின் கூற்று எந்த அளவிற்கு நம்பகமானது என அறிய உதவியாக இருக்கும்.

எல்லா புகழும் இறைவனுக்கே

//Maintenance Technician// இணையத்தில் தேடினேன். வேலைக்கு எடுப்பதாகத் தெரிகிறது. நீங்கள் சொன்ன விதமாக வருவதானால், வேலை இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, work permit கொடுத்திருப்பார்கள். அதை வைத்துத்தான் விசா கொடுப்பார்கள்.

//அண்ணன் பணிபுரியும் காலம் வரை அண்ணி மற்றும் குழந்தைகள் அங்கு வசிக்க எண்ணுகிறார்கள்// இதே போல வந்தவர்கள் யாரையும் எனக்குத் தெரியவில்லை. விசாரித்துப் பார்க்கிறேன். தகவல் சொல்லக் கூடிய ஒருவர் இருந்தார். விடுமுறையில் இந்தியா போவதாகச் சொன்னார். திரும்பியிருந்தால் விசாரித்துச் சொல்கிறேன்.

அண்ணாவுக்கு ஏஜன்சி ஆட்கள் மெடிகல் இன்சூரன்ஸ் பற்றிச் சொல்லியிருப்பார்கள். அண்ணி, குழந்தைகள் விசிட்டர்ஸ் விசாவில் வருவதானால், மருத்துவச் செலவு, கல்விச் செலவு ஓவர்சீஸ் ஆட்களுக்கு மிகவும் அதிகம். குழந்தைகள் கல்வி - அவர்களுக்கு ஸ்டூடண்ட் விசா இல்லாவிட்டால் ஓவர்சீஸ் ரேட் வரும். இது பற்றியும் ஏஜன்சியில் விசாரிக்கச் சொல்லுங்கள்.
இங்கு கார் இல்லாமல் சமாளிப்பது சிரமம். வந்ததும் வாங்கவேண்டி இருக்கும். (இந்திய லைசன்ஸோடு ஒரு வருடம் ஓடலாம்.) மற்றப்படி வீட்டு வாடகை சமாளிக்கக் கூடியதாகத்தான் இருக்கும். வேலை எந்த ஊரில் கிடைக்கிறது என்பதையும் அவர்கள் வீடு எடுக்கும் இடத்தையும் பொறுத்தது இது.

IELTS தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.என்னுடைய தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்.குட்டி பாப்பாவை வைத்துக் கொண்டு பதிவிட முடியவில்லை.

நீங்கள் சொன்னவற்றை அண்ணனிடம் தெரியப்படுத்திவிட்டேன்.

எல்லா புகழும் இறைவனுக்கே

வணக்கம் remu உங்கள் அன்னா வெளி நாடு சென்று விட்டாரா.அப்படி செல்லும் போது உடன் அன்னி குழந்தைக்கும் வாய்ப்பு கிடைத்ததா? என் கணவரும் maintenance ல தேடி கொண்டு இருக்கிறார் .முடிந்தால் அவரிடம் link வாங்கி கொடுத்து உதவுங்கள் .consultancy link நம்பிக்கையானது இருந்தால் கொடுத்து உதவுங்கள் தோழிகலெ

எதை நினைத்தும் கலங்க வேண்டாம்.உண்மையான பாசம் உடன் இருக்கும்..

மேலும் சில பதிவுகள்