கோவக்காய்-உளுந்து சட்னி

தேதி: April 3, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஹர்ஷா அவர்களின் கோவக்காய்-உளுந்து சட்னி குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஹர்ஷா அவர்களுக்கு நன்றிகள்.

 

கோவக்காய் - 5
காய்ந்த மிளகாய் - 5
உளுந்து - ஒரு மேசைக்கரண்டி
புளி - கோலி குண்டு அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

கோவக்காயை கழுவி விட்டு நான்காக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கோவக்காயை நன்கு வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுந்து மற்றும் புளி சேர்த்து நன்கு வதக்கவும்.
எல்லாவற்றையும் ஆற வைக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான கோவக்காய் உளுந்து சட்னி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Nallaa irukku. Pudhusum kuuda. Will try. Vaazthukkal :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா