என் 4 வயது பையனுக்கு அவனுடன் விளையாட அருகில் பிள்ளைகள் இல்லை. அவனோட அப்பாவும் ஆபிஸ் போய்டுறாங்க. நாங்க இரண்டு பேர் மட்டும் தான் இருக்கோம். அவன் ரொம்ப போர் ஆ பீல் பண்றான். எதாவது விளையாடலாம்னா மறுபடியும்மா வேற எதாவது பண்ணலாம்மா என்கிறான். சின்ன சின்னதா ஆக்டிவிட்டி கேம் கேட்கிறான். எதாவது ஐடியா கொடுங்கள் தோழிகளே.. உன் ப்ரன்ட்ஸ்ட்ட கேளுமா நெட்லன்னு அவன் தான் ஐடியா கொடுத்தான்..
4 வயது குழந்தை
படம் வரைய பழகலாம். வரைந்து கொடுத்து கலரடிக்க விடலாம். போர்ட் கேம்ஸ் வாங்கி வைக்கலாம். போர்ட்ல வரக்கூடிய puzzles வாங்கி கொடுக்கலாம். சின்னதா வீட்டில் விளையாடும் விளையாட்டு பொருட்கள் நிறைய இருக்குங்க... டாய் ஷாப் போனா நிறைய கிடைக்கும். சில குழந்தைகளின் வளார்ச்சிக்கும் நல்லது. போய் பாருங்க ஐடியா கிடைக்கும். ஏன்னா உங்க வீட்டுக்குள் என்ன என்ன விளையாட இயலும் என்பதை வைத்து நீங்க தேர்வு செய்வது தான் பெட்டர்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கைவேலை
அறுசுவைல கிட்ஸ் க்ராஃப்ட்ஸ் இருக்கு. விரும்பினால் பொருத்தமானதைத் தெரிந்து குழந்தையோட சேர்ந்து ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.
vanivasu, punitha
நன்றி தோழிகளே.. நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன். அவனுக்கு கதை சொல்லி டைம் பாஸ் பண்ணிட்டு இருக்கேன்..
building blocks வாங்கி
building blocks வாங்கி தரலாம்.
coloring book வாங்கி தரலாம்
ball குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஒரு பக்கட் அப்படி வச்சிட்டு அதுல கரக்டா போட சொல்லாம்
கண்ணாமூச்சி விளையாடலாம்
colors சொல்லி தொட சொல்லி விளையாடலாம்