நண்டு குழம்பு

தேதி: April 4, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

நண்டு - 6
புளி - எலுமிச்சை அளவு
தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப‌
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - ஒன்று
கத்தரிக்காய் - 2
தேங்காய் - கால் மூடி
வடகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

புளியை நன்கு நீர்க்க‌ கரைத்து வடிகட்டி அதனுடன் தனி மிளகாய்த் தூள், குழம்பு மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கைகளால் நன்கு கலந்து விடவும்.
அதனுடன் மெல்லியதாக‌ நறுக்கிய‌ வெங்காயம், பச்சை மிளகாய், தட்டிய‌ பூண்டு, தக்காளியின் மூக்கை நறுக்கி விட்டு முழுதாக சேர்க்கவும். பின்னர் கைகளால் தக்காளியை நன்கு பிழிந்து விடவும். நறுக்கி துண்டுகளாக போடுவதை விட‌ இப்படி செய்வது சுவையை கூட்டும். எல்லா பொருளையும் சேர்த்து நன்கு பிசையவும்.
குழம்பு சட்டியில் எண்ணெய் ஊற்றி வடகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
அதில் கரைத்து வைத்துள்ள‌ புளிக்கரைசலை ஊற்றவும்.
இந்த கலவையில் கத்தரிக்காயை சேர்த்து மூடி போட்டு கொதிக்க‌ விடவும்.
குழம்பு கொதிக்கும் வாசனை வந்ததும் சுத்தம் செய்த‌ நண்டை சேர்க்கவும்.
நண்டு நன்கு வெந்த‌ பிறகு தேங்காய் பால் (அ) அரைத்த‌ தேங்காய் விழுது சேர்க்கவும். ஒரு நிமிடத்தில் கழித்துகறிவேப்பிலை தூவி இறக்கவும்.
சுவையான‌ நண்டு குழம்பு தயார்.

தேங்காயை எந்த‌ உணவிலும் வேக‌ வைக்க‌ கூடாது. தேங்காயை பச்சையாக‌ சாப்பிடுவது நல்லது. சூடு பண்ணினால் கொழுப்பாக‌ மாறும். ஆகவே தேங்காய் பால் சேர்த்து லேசாக‌ கொதிக்க‌ விட்டு ஒரு நிமிடத்தில் இறக்கி விடுவது நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலக்கறீங்க நண்டு வகை உணவுகள் :) படம் சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நண்டு ஸ்பெசலிஸ்ட். சூப்பர்ங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்பை அழகாக‌ வெளியிட்ட‌ அட்மினுக்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி வனி அக்கா. உங்க‌ அளவு இல்லனாலும் ஏதோ கொஞ்சம்.

எல்லாம் சில‌ காலம்.....

ஐயய்யோ ஸ்பெஷலிஸ்ட் லாம் இல்லீங்க‌. ஏதோ கொஞ்சம் வரும். அத‌ வெச்சி வண்டி ஓடுது. இப்டி உசுப்பேத்தி ரனகலம் ஆக்காதீங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....