இஞ்சி, முந்திரி பக்கோடா

தேதி: April 4, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை மாவு - அரை கப்
அரிசி மாவு - 4 மேசைக்கரண்டி
சோள மாவு - 4 மேசைக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
இஞ்சி - ஒரு சிறுதுண்டு
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
முந்திரி - 15
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லி இலை - சிறிதளவு (விரும்பினால்)
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க


 

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.
வெங்காயம் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும். முந்திரியை ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.
எல்லாவற்றையும் மாவு கலவையில் சேர்க்கவும்.
மாவு கலவையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பக்கோடா மாவு பதத்தில் பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி சிறிது சிறிதாக கிள்ளி போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.
சுவையான இஞ்சி, முந்திரி பக்கோடா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Enaku romba pidicha dish.today snacks ithan

இப்பொழுது தான் செய்து சாப்பிட்டுட்டு வரேன் மிக‌ மிக‌ அருமையான‌ ஸ்னாக்ஸ் என் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது சுட‌ சுட‌ சாப்பிட‌ அருமை.. நன்றி..

ரொம்ப நல்லா இருக்குங்க... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மொறு மொறு பக்கோடா சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

குறிப்பினை வெளியிட்ட‌ அட்மின் மற்றும் டீமிடர்க்கு மிக்க‌ நன்றி.

மிக்க‌ நன்றி;ஷேக் நசிரா.

செய்து பார்த்து உடனே பதிவிட்ட‌மைக்கு மிக்க‌ நன்றி;சிராஜ்சலஜ்.

ரொம்ப‌ நன்றி;வனி

ரொம்ப‌ நன்றி;சுவர்ணா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பக்கோடா மொறுமொறுவென்று அருமையாக‌ இருந்தது சிஸ்டர். 10 நிமிடத்தில் தட்டு காலி . ரொம்ப‌ நன்றி.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!